சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்த ஆண்டின் மிக நீண்ட பகல் பொழுது நாளில் நிகழும் சூரிய கிரகணம் - சில சுவாரஸ்யங்கள்

ஜூன் 21ஆம் தேதி ஞாயிறு கிழமை இந்த ஆண்டின் மிக நீண்ட பகல் பொழுதாக இருக்கும். இந்த நாளில் பூமியானது சூரியனின் பக்கம் அதிகமாக திரும்பியிருக்கும் இந்த நிலை ஆங்கிலத்தில் கோடை திருப்புநிலை Summer Solstice க

Google Oneindia Tamil News

சென்னை: உத்தராயண காலத்தின் கடைசி மாதம் ஆனி, வடக்கு நோக்கி நகர்ந்து வரும் சூரியன் பூமிப் பந்தின் வடக்கு மூலையில் இருப்பதால் ஜூன் 21ஆம் தேதி நீண்ட நேரம் சூரிய ஒளி தெரியும். அன்றைய தினத்தின் பகல் ஆண்டிலேயே நீண்டதாக இருக்கும்.
அன்றைய தினம் சூரியன் சீக்கிரம் உதயமாகிவிடும் மறைவதற்கு மிக தாமதமாகும். பூமி சூரியனின் பக்கமாக அதிகமாகத் திரும்பியுள்ள நிலை ஆங்கிலத்தில் கோடை திருப்புநிலை எனப்படுகிறது. இது கோடை கால சங்கராந்தியாகும். இந்த ஆண்டு மிக நீண்ட பகல் பொழுது நாளில் சூரிய கிரகணம் நிகழ்வது கூடுதல் சிறப்பு.

Recommended Video

    நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை வீட்டில் இருந்தே கண்டு ரசிக்க சில ஐடியாக்கள்

    பூமத்திய ரேகை எனப்படும் நில நடுக்கோட்டினை மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 21 ஆகிய நாட்களில் சூரியன் கடந்து செல்கிறது. இந்த நாட்களில் இரவும், பகலும் சமமான நேரம் உடையவையாக இருக்கும். இவ்வரிசையில், ஜூன் 21ம் தேதி ஆண்டின் நீளமான பகல் பொழுது நிலவும்.

    இதேபோல், பூமியின் வடக்கு பகுதிக்கு அருகேயுள்ள பகுதிகளில் டிசம்பர் மாதம் தினசரி சூரியன் சீக்கிரம் மறைந்துவிடும். அதன்படி, வடக்கு நாடுகளில் ஆண்டின் குறுகிய பகல் - நீண்ட இரவாக இருக்கும் இது டிசம்பர் 22ஆம் தேதி நிகழ்கிறது.

    சூரிய கிரகணம் 2020 : நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்காதீங்கசூரிய கிரகணம் 2020 : நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்காதீங்க

    சாய்வாக சுற்றும் பூமி

    சாய்வாக சுற்றும் பூமி

    பூமியானது ஒரு பக்கம் சாய்வாகவே அதாவது 23.45 டிகிரி சாய்வான அச்சில் சூரியனை சுற்றி வருகிறது. சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு 1,07,826 கி.மீ. வேகத்தில் சூரியனை பூமி சுற்றுகிறது.

    பூமியின் மீது படும் சூரிய ஒளி

    பூமியின் மீது படும் சூரிய ஒளி

    பூமி சாய்வாக சுற்றுவதால் பூமியின் ஒரு பகுதியில் சூரிய ஒளிபடும். மறுபக்கத்தில் சூரிய ஒளி குறைவாக படும். சூரிய ஒளி படுவதைப் பொறுத்து இரவும் பகலும் நீண்டும் குறுகியும் அமைகின்றன. சூரிய ஒளி சூரியனில் இருந்து புறப்பட்டு பூமியை வந்தடைய 8 நிமிடம் 20 விநாடி எடுத்துக்கொள்கிறது.

    சூரியனின் நகர்வுகள்

    சூரியனின் நகர்வுகள்

    சூரியன் ஆறுமாதங்கள் தெற்கில் இருந்து வடக்காகவும் ஆறு மாதங்கள் வடக்கில் இருந்து தெற்காகவும் நகர்கிறார். சித்திரை முதல் ஆனி முடிய உத்தராயணம் சூரியன் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி நகர்வார். ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயணம் சூரியன் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி நகரும் காலம். உத்தரயணம் காலத்தில் பகல் பொழுது அதிகமாகவும் தட்சிணாயணம் காலத்தில் பகல் பொழுது படிப்படியாக குறையத்தொடங்கும்.

    ஆண்டின் சமமான நாள்

    ஆண்டின் சமமான நாள்

    ஆண்டுக்கு இருமுறை மட்டும் இரவும் பகலும் சமமாக இருக்கும் அது பங்குனி மாதம் அதாவது மார்ச் 20ஆம் தேதியும் செப்டம்பர் 22,23 புரட்டாசி மாதத்தில் 6 அல்லது 7ஆம் தேதியும் வரும். இது சமமான பகல் இரவு நாளாக இருக்கும். இந்த 2 நாட்களில் மட்டுமே உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் இரவும், பகலும் ஒரே அளவுக்கு இருக்கும். செப்டம்பர் 23ஆம் தேதிக்குப் பிறகு இந்தியாவில் பகல் நேரம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வரும்.

    சூரிய கிரகண நாளில் அதிசயம்

    சூரிய கிரகண நாளில் அதிசயம்

    ஜூன் மாதம் 21ஆம் தேதி ஆண்டின் நீண்ட பகல் பொழுதாகவும், டிசம்பர் 21ஆம் தேதி ஆண்டின் நீண்ட இரவுப்பொழுதாகவும் இருக்கும். இந்த அதிசய நிகழ்வுகள் எல்லாம் ஆண்டிற்கு ஒருமுறைதான் வரும். ஜூன் 21ஆம் தேதி இந்த ஆண்டின் நீண்ட பகல் பொழுதை அனுபவிக்கப் போகும் நாளில் சூரிய கிரகணமும் வரும் சிறப்பு. வானவியல் அதிசயத்தை அனுபவிக்க தயாராகுங்கள்.

    English summary
    Summer Solstice happens somewhere between June 20 and June 22 in the Northern Hemisphere and this year it falls on June 21
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X