சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வர இருக்கும் தடுப்பூசியை மட்டும் நம்பி இருக்கக்கூடாது.. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

Google Oneindia Tamil News

சென்னை; தடுப்பூசி வர இருக்கிறது என்ற நல்ல செய்தி இருந்தாலும், அது வரும் வரைக்கும் முககவசம், சமூக இடைவெளி தான் நிரந்தர தடுப்பூசி. அதனை மதிக்காமல் வர இருக்கும் தடுப்பூசியை நம்பி இருக்கக்கூடாது என்பதுதான் பொது சுகாதார வல்லுனர்களின் கருத்து என சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறும் போது, "சென்னை ஐ.ஐ.டி.யில் தொடர்ந்து பரிசோதனைகள் நடத்தப்பட்டது. அதில் 106 பேரில் ஒருவருக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதேபோல், அண்ணா பல்கலைக்கழகத்தில் 279 பேரிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒருவருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.. எல்லா கல்லூரிகளிலும் மாணவர்களிடம் சுழற்சி முறையில் பரிசோதனை செய்து கொண்டே இருப்போம்.

அதிர்ச்சி.. தடுப்பூசி போட்டுக் கொண்ட நர்ஸ்.. கொஞ்ச நேரத்தில் சரிந்து மயங்கி விழுந்து.. பரபரப்பு! அதிர்ச்சி.. தடுப்பூசி போட்டுக் கொண்ட நர்ஸ்.. கொஞ்ச நேரத்தில் சரிந்து மயங்கி விழுந்து.. பரபரப்பு!

கொரோனா பரிசோதனை

கொரோனா பரிசோதனை

அனைத்து தரப்பு மக்களும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள விரும்பினால் தராளமாக செய்து கொள்ளலாம். தமிழக அரசு அதற்கு தயாராகவே உள்ளது.
இதுவரை சென்னையில் உள்ள கல்லூரிகளில் 8 ஆயிரத்து 548 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் 219 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

நம்பியிருக்கக் கூடாது

நம்பியிருக்கக் கூடாது

கொரோனாவை வெல்ல பொதுமக்கள் சுகாதாரத்துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். பேருந்து நிலையங்கள், ரயில்வே ஸ்டேசன்களில் முககவசம் அணியாமல் மக்கள் செல்கிறார்க.. தடுப்பூசி வர இருக்கிறது என்ற நல்ல செய்தி உள்ளது. அது வரும் வரைக்கும் முககவசம், சமூக இடைவெளி தான் நிரந்தர தடுப்பூசி. அதனை மதிக்காமல் வர இருக்கும் தடுப்பூசியை நம்பி இருக்கக்கூடாது என்பதுதான் பொது சுகாதார வல்லுனர்களின் கருத்து.

மருத்துவர்கள் முயற்சி

மருத்துவர்கள் முயற்சி

மருத்துவர்களின் முயற்சியால் தான் கொரோனாவால் நாளொன்றுக்கு 127 என்ற அளவில் இருந்த உயிரிழப்பு, தற்போது 10 முதல் 12 என்ற அளவில் குறைந்து இருக்கிறது. 20-க்கும் மேற்பட்ட நபர்கள் எங்கே கூடி இருந் தாலும் அங்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். எனவே பொதுமக்கள் முககவசத்தை கண்டிப்பாக அணிதல் வேண்டும்.

முதல்வர் எப்போது எடுப்பார்

முதல்வர் எப்போது எடுப்பார்

கொள்கை ரீதியாக மாவட்ட கலெக்டர்கள், மருத்துவ வல்லுனர்களுடன், பொது சுகாதார வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்ட பின்னரே பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு குறித்து முதல்வர் முடிவெடுப்பார்" என்றார்.

English summary
Despite the good news that the vaccine is about to come, the mask, the social gap until it arrives is the permanent vaccine. Health Secretary Dr. J. Radhakrishnan said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X