சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பணியின்போது செல்போன் பேசிய பெண் போலீஸ் சங்கீதா.. மெமோ தந்த எஸ்பி

பணியின்போது செல்போன் பேசிய பெண் போலீசுக்கு மெமோ தரப்பட்டது.

Google Oneindia Tamil News

Recommended Video

    பணி நேரத்தில் செல்போனில் பேச்சு.. பெண் போலீசுக்கு மெமோ- வீடியோ

    சென்னை: வேலையை பார்க்காமல் செல்போனில் பேசிக் கொண்டிருந்த பெண் போலீஸ் சங்கீதாவுக்கு மெமோ கொடுக்கப்பட்டுள்ளது.

    சில தினங்களுக்கு முன்பு சென்னை ஹைகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அரசுத்தரப்பு வழக்கறிஞரிடம், போக்குவரத்து போலீசாரின் பணிகள் குறித்து அதிருப்தி தெரிவித்தார்.

    "நான் கோர்ட்டுக்கு வரும்போது பார்த்தேன்.. சிக்னல் பக்கத்துல ரோட்டோரம் ஒரு சேர் போட்டு கொண்டு போலீசார் உட்கார்ந்து கொள்கிறார்கள்.

    எந்த சிக்னல்?

    எந்த சிக்னல்?

    போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் வேலையை பார்க்காமல் எப்பவுமே செல்போனில் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். அதற்கு அரசு வழக்கறிஞர், எந்த சிக்னல்? என்று கேட்டார்.

    நீதிபதி அறிவுறுத்தல்

    நீதிபதி அறிவுறுத்தல்

    அதற்கு நீதிபதி, "அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நான் இதை சொல்லவில்லை, பொதுமக்களின் உயிர், பாதுகாப்பு நமக்கு முக்கியம் அல்லவா? சென்னை முழுதுமே போக்குவரத்து காவலர்கள் யாரும் சரியாக பணியாற்றுவதில்லை, எப்பவுமே செல்போன்களில் பேசுவது, வாட்ஸ் அப் பார்ப்பது என்று இருக்கிறார்கள். டிஜிபி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையத்துக்கு கொண்டு செல்லுங்கள்" என்று அறிவுறுத்தினார்.

    பணியின்போது செல்போன்

    பணியின்போது செல்போன்

    இதையடுத்து மறுநாளே டிஜிபி சார்பில் ஒரு சுற்றறிக்கை அனைத்து போலீசாருக்கும் அனுப்பப்பட்டது. அதில், பணியின்போது செல்போன் பயன்படுத்தகூடாது என்ற உத்தரவை கடுமையாகப் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், பணியின்போது, செல்போனை பயன்படுத்தியதாக பெண் போலீஸ் ஒருவர் சிக்கி உள்ளார்.

    எஸ்.பி.மெமோ

    எஸ்.பி.மெமோ

    திருவாரூர் தாலுகா காவல்நிலைய முதுநிலை காவலர் சங்கீதாவுக்கு எஸ்.பி.நோட்டிஸ் அனுப்பியுள்ளார். ஆட்சியர் அலுவலக பாதுகாப்புப் பணியில் இருந்தபோது செல்போனை பயன்படுத்தியதற்காக அவருக்கு மாவட்ட எஸ்.பி. இந்த மெமோவை கொடுத்துள்ளார். இதுகுறித்து 5 நாட்களுக்குள் சங்கீதா விளக்கம் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    English summary
    Memo has been assigned to the Woman police who used cellphone during the work near Thiruvarur. It has also been ordered to be interrogated within 5 days.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X