சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடுத்த 2 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்

Google Oneindia Tamil News

சென்னை : உள் தமிழகத்தில் 2 நாட்களுக்கு இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோடைக்காலம் துவங்குவதற்கு முன்பாகவே சென்னையில் வெயில் சுட்டெரிக்க தொடங்கி உள்ளது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

The Next 2 days will be too Munch Of sunny: Meteorological Alert

அக்னி நட்சத்திரம் என்று சொல்லப்படும் கத்திரி வெயில் இன்னும் ஆரம்பிக்க சில நாட்கள் இருக்கும் நிலையில், குறிப்பாக தலைநகர் சென்னையில் வெயிலின் தாக்கம் என்பது சற்று அதிகமாக உள்ளது .

இதனால், மதிய நேரங்களில் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்

காங்கிரஸ் வேட்பாளர் சொத்து மதிப்பு ரூ.895 கோடி! டாப் பணக்கார வேட்பாளர்கள் இவர்கள்தான் காங்கிரஸ் வேட்பாளர் சொத்து மதிப்பு ரூ.895 கோடி! டாப் பணக்கார வேட்பாளர்கள் இவர்கள்தான்

இந்த நிலையில், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

வரும் 25-ஆம் தேதி வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மூன்று நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Temperature will rise more than normal for 2 days in Tamil Nadu - Meteorological centre
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X