சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'சூப்பர்'.. அதிக வேக்சின் போட்டவர்கள் பட்டியலில் நீலகிரி முதலிடம்.. 2-வது எந்த மாவட்டம் தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை: 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களில் பட்டியலில் நீலகிரி மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. நீலகிரியில் 85.65 சதவீதம் பேர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்கள். கோவை இரண்டாவது இடத்தில் உள்ளது.

Recommended Video

    Tamilnadu Lockdown: increases fine for not wearing masks | OneIndia Tamil

    உங்களால் எங்களுக்கு வேலை கிடக்கலை.. ஆத்திரத்தில் வடமாநில இளைஞரை கத்தியால் வெட்டிய 4 பேர் கைது உங்களால் எங்களுக்கு வேலை கிடக்கலை.. ஆத்திரத்தில் வடமாநில இளைஞரை கத்தியால் வெட்டிய 4 பேர் கைது

    சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொடிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. புதிது, புதிதாக வைரஸ் மாறுபாடு அடைந்து மனிதர்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது.

     2.74 லட்சம் பேருக்கு கொரோனா

    2.74 லட்சம் பேருக்கு கொரோனா

    இந்த வகையில் சமீபத்திய புதிய வைரஸ் ஓமிக்ரான். இந்த வைரஸ் இந்தியாவுக்குள் புகுந்து விட்டது. ஓமிக்ரான் வைரஸ் காரணமாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிக அதிவேகமாக உள்ளது. கடந்த 2 மணி நேரத்தில் மட்டும் நாட்டில் 2.74 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆக்டிவ் கேஸ்களும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

     ஒரே பேராயுதம் தடுப்பூசி

    ஒரே பேராயுதம் தடுப்பூசி

    கொரோனாவை தடுக்கும் ஒரே பேராயுதம் தடுப்பூசிதான். இதனால்தான் உலக நாடுகள் விரைவாக தடுப்பூசி செலுத்தி வருகின்றன. இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின், ஸ்புட்னிக்-வி ஆகிய 3 தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ந் தேதி தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின. தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கி இன்றுடன் ஓராண்டு ஆகிறது. தடுப்பூசி போடுவதற்கு முதலில் தயக்கம் காட்டிய மக்கள் அதன்பிறகு பாதிப்பை உணர்ந்து ஆர்வமாக தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

    தடுப்பூசி முகாம்கள்

    தடுப்பூசி முகாம்கள்

    தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. வாரம்தோறும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன. சிறப்பு முகாம்கள் மூலம் தமிழகத்தில் 3.17 கோடி பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். ஆனாலும் 2 டோஸ் தடுப்பூசி போடுவதில் தமிழகம் பின்தங்கியே உள்ளது. காஞ்சீபுரம் மாவட்டம் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. கடலூர், கோவை , விழுப்புரம், அரியலூர் ஆகிய மாவட்டங்களிலும் ஒரு டோஸ் தடுப்பூசி அதிகமாக போடப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டம் முதலிடம்

    நீலகிரி மாவட்டம் முதலிடம்

    2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களில் பட்டியலில் மலை மாவட்டமான நீலகிரி முதலிடத்தில் உள்ளது. நீலகிரியில் மட்டும் 85.65 சதவீதம் பேர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்கள். 81.69 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தி கோவை மாவட்டம் 2-வது இடத்தில் உள்ளது. காஞ்சீபுரத்தில் 78.72 சதவீதம் பேர், 2 ராமநாதபுரம் மாவட்டத்தில் 76.06 சதவீதம் பேர், அரியலூர் மாவட்டத்தில் 74.34 சதவீதம் பேர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    English summary
    The Nilgiris district tops the list of 2 dose vaccinators. In the Nilgiris, 85.65 percent have been vaccinated with 2 doses. Coimbatore is in second place. 3.17 crore people in Tamil Nadu have been vaccinated through special camps
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X