சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இணக்கமாக வாழும் மக்கள் மத்தியில் பீதி.. காவல்துறையின் சேவகம் யாருக்கு? ஸ்டாலின் கேள்வி

Google Oneindia Tamil News

சென்னை: இணக்கமாக வாழும் மக்கள் மத்தியில் இனம்புரியாத பீதி ஏற்பட்டுள்ளது. காவல்துறையின் அலட்சியத்தால் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் உருவாகியுள்ளது என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோரின் வீடுகள் அடித்து நொறுக்கி சேதப்படுத்தப்பட்டதையும், அப்பாவி மக்கள் பலர் கடுமையான தாக்குதலுக்குள்ளானதையும் தடுத்து நிறுத்தாமல், காவல்துறை அதிகாரிகள் வேடிக்கை பார்த்தது கடும் கண்டனத்திற்குரியது. நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கும் சுயநல தீய சக்திகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டாமா?

The polices negligence is a law-and-order problem..Stalin condemned

திமுக கூலிப்படையை ஏவி பாஜகவினரை தாக்கியது.. குமரியில் பொன். ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு!திமுக கூலிப்படையை ஏவி பாஜகவினரை தாக்கியது.. குமரியில் பொன். ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

காவல்துறை யாருக்கு சேவகம் செய்து கொண்டிருக்கிறது என ஸ்டாலின் வினவியுள்ளார். தற்போது புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியிலும் இரு பிரிவினருக்கு இடையில் மோதல் ஏற்பட்டு அங்கும் அமைதி சீர்குலைந்துள்ளது.

இது போன்ற சம்பவங்களை தடுக்க முடியாமல் அம்மாவட்ட எஸ்.பி.க்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதில் காவல்துறை தனது மெத்தன போக்கை கைவிட்டு, சமூக நல்லிணக்கத்திற்குச் பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடும் சக்திகள் யாராக இருந்தாலும் இரும்புக் கரம் கொண்டு அடக்கிட வேண்டும்.

மக்கள் அனைவரும் சகோதரமனப்பான்மையுடன் சுமுகமான முறையில் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையையும் உருவாக்கிட வேண்டும். இதனை தமிழக தலைமை தேர்தல் அதிகாரியையும், தேர்தல் டி.ஜி.பி.யையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என ஸ்டாலின் கூறியுள்ளார்.

English summary
DMK leader Stalin accused the law and order issues in Tamil Nadu for negligence of police
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X