சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அய்யா தலைவர்களே.. பக்குவமடைய டிரை பண்ணுங்கய்யா.. மக்கள் உங்களை பார்த்துட்டிருக்காங்க!

தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் நாகரீகத்துடன் பேசுவது அவசியம்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Leaders angry on Press | பத்திரிகையாளர்களிடம் கோபப்படும் அரசியல் தலைவர்கள்- வீடியோ

    சென்னை: தலைவர்கள் எல்லாம் வர வர ரொம்ப கோபமாகிறார்கள். உக்கிரமடைகிறார்கள், எரிச்சல் படுகிறார்கள். ஆவேசம் காட்டுகிறார்கள். தங்களை மக்கள் கவனிக்கிறார்களே என்று கூட அவர்கள் நினைப்பதில்லை.

    அரசியல்வாதிகள், செய்தியாளர்கள்! இவர்கள் இருவருமே எப்போதுமே பங்காளிகள்... அதேசமயத்தில் பகையாளிகளும் கூட! நல்ல கேள்வி கேட்டால் தலைவர்கள் சந்தோஷமடைவார்கள்! எடக்கு மடக்கான கேள்வி கேட்டால் போதும் உடனே தலைவர்கள் கடுப்பாகி விடுகிறார்கள்!

    சமீப ஆண்டுகளாக பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதில் கொடுப்பதற்குப் பதில் கோபம் காட்டுவதும், அடிக்கப் பாய்வதும், தேவையில்லாத வார்த்தைகளைப் பிரயோகிப்பதும் அதிகரித்து வருகிறது. சில நேரங்களில் தாக்கக் கூட முயற்சிக்கிறார்கள் தலைவர்கள்!

    லஞ்சமாக 2 பாலிவுட் நடிகைகளை 'அந்த' அமைச்சர்.... சு.சுவாமி 'திடுக்' ட்வீட்! லஞ்சமாக 2 பாலிவுட் நடிகைகளை 'அந்த' அமைச்சர்.... சு.சுவாமி 'திடுக்' ட்வீட்!

    பிள்ளையார் சுழி போட்ட விஜயகாந்த்

    பிள்ளையார் சுழி போட்ட விஜயகாந்த்

    இந்த அதிரடி பழக்கத்திற்குப் பிள்ளையார் சுழி போட்டவர் நம்ம விஜயகாந்த்தான். தூக்கி அடிச்சுருவேன் பார்த்துக்கோ, போய்யா, நீயாடா எனக்கு சம்பளம் கொடுக்கிற என்றெல்லாம் திட்டித் தீர்த்து, காரித் துப்பி, விமான நிலையத்தில் செய்தியாளர் ஒருவரை அடிக்கப் பாய்ந்து, பிரஸ் மீட்டில் வெளிநடப்பு செய்து.. அவர் செய்யாத சேட்டை இல்லை.

    பாரம்பரியத்தை தொடர்ந்த பிரேமலதா

    பாரம்பரியத்தை தொடர்ந்த பிரேமலதா

    அடுத்து அவரது மனைவி பிரேமலதாவும் சில வாரங்களுக்கு முன்பு தனது கணவர் விட்டுச் சென்ற பணியைத் தொடர்ந்தார். செய்தியாளர்கள், அதிமுக கூட்டணி, திமுகவுடன் ரகசியப் பேச்சு, பாஜகவுடன் பேச்சு என சரமாரியாக தேமுதிக செயல்பட்ட விதம் குறித்துக் கேட்டபோது கோபமடைந்தார். ஒருமையில் பேச ஆரம்பித்தார். கோபம் கக்கினார். ருத்ரதாண்டவமே ஆடி விட்டார்.

    உக்கிரம்

    உக்கிரம்

    ஆனால் இதெல்லாத்தையும் விட நேற்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஒரு படி மேலே போய் அனைவரையும் அதிர வைத்து விட்டார். தன்னை தொடர்ந்து கேள்வி கேட்ட செய்தியாளரைப் பார்த்து கோபமடைந்து "நீ யார், என்ன சாதி என்று கேட்ட அவர் என்ன தெரு என்றும் கூட கேட்பேன்" என்று கூறியபோது செய்தியாளர்கள் அனைவருமே அதிர்ந்தனர்.

    வரலாறு காணாத போக்கு

    வரலாறு காணாத போக்கு

    அரசியல் தலைவர்களின் போக்கு, அவர்களது செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை வைத்துத்தான் செய்தியாளர்கள் அவர்களிடம் பேசுகிறார்கள், விளக்கம் கேட்கிறார்கள், கேள்வி கேட்கிறார்கள். இதெல்லாம் கூட அவர்களுக்காக அல்ல.. மக்களிடம் கொண்டு போய் சேர்க்கத்தான். இந்த அடிப்படை கூட புரியாமல் தலைவர்கள் செயல்படுவதும், கோபம் காட்டுவதும், சாதி பெயரைக் கேட்பதும், தெருப் பெயரைக் கூட கேட்பேன் என்று கூறுவதும் அதிர்ச்சிகரமாக இருக்கிறது, அயர்ச்சியாக வருகிறது.

    பக்குவம் தேவை

    பக்குவம் தேவை

    தனிப்பட்ட வாழ்க்கை, கொள்கை குறித்து யாரும் கவலைப்படப் போவதும் இல்லை கண்டு கொள்ளப் போவதும் இல்லை. ஆனால் பொது வாழ்க்கையில் அவர்கள் சந்தித்து வரும் சம்பவங்கள் குறித்த கேள்விகளையும், விளக்கத்தையும்தான் செய்தியாளர்கள் கேட்பது வழக்கம். இதை எதிர் கொள்வதும், எதிர்கொள்ளாமல் பதிலளிக்க விரும்பவில்லை என்று கடந்து செல்வதும் தலைவர்களின் உரிமை. ஆனால் அதைத் தவிர்த்து தனிப்பட்ட முறையில் வார்த்தைப் பிரயோகம் செய்வதும், சாதியெல்லாம் கேட்பதும் நல்லாவா இருக்கு?

    நல்லாவே இல்லையே

    நல்லாவே இல்லையே

    சாதி மறுப்பு இயக்கம் கண்ட மண் தமிழகம். இங்கு சாதியை, மதத்தை வைத்து பிரித்துப் பார்க்கும் யாரையும் மக்கள் ஏற்பதில்லை. அப்படிப்பட்ட மாநிலத்தில் எல்லோருக்கும் பொதுவான பத்திரிகையாளர்களைப் பார்த்து சாதி கேட்பதும், அடிக்க வருவதும் நல்லாவே இல்லையே தலைவர்களே.. !

    English summary
    The leaders of Tamilnadu have to prepare for their words. People are closely watching every talk of politicians.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X