சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

12 இடங்களில் சதம் அடித்த வெயில்.. அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் ஒரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என சொல்லப்படுகிறது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதத்திற்குப் பிறகு மழை என்பதே இல்லாமல் இருந்தது. அவ்வப்போது பெய்யும் மழையினால் எந்த தாக்கமும் இல்லாமல் போய்விட்டது. அது மட்டுமல்லாமல் இப்போது அக்னி நட்சத்திரம் என்பதால் வரலாறு காணாத அளவுக்கு வெயிலும் கொளுத்தி வருகிறது.

The possibility of heavy rain in Tamilnadu in the next 24 hours

தமிழகத்தின் பல பகுதிகளில் வெயில் 100 டிகிரிக்கு மேல்வெளுத்து வாங்கி வருகிறது. புதுச்சேரியிலும் வெயில் சதம் அடித்தது. தமிழகத்தில் சென்னை, மதுரை, கடலூர், தர்மபுரி, கரூர், நாகை, நாமக்கல், பாளையங்கோட்டை, சேலம், திருச்சி, திருத்தணி, வேலூர் ஆகிய 12 இடங்களில் நேற்று வெயில் 100 டிகிரியை தாண்டியது. இதில், அதிகபட்சமாக திருத்தணியில் 113.18 டிகிரி வாட்டியது.

சென்னையில் 104.54 டிகிரி, கோவையில் 98.6 டிகிரி, கடலூரில் 100.94 டிகிரி, தர்மபுரியில் 102.2 டிகிரி, கரூரில் 105.8 டிகிரி, மதுரையில் 105.8 டிகிரி, நாகையில் 100.76 டிகிரி, நாமக்கல்லில் 102.2 டிகிரி, பாளையங்கோட்டையில், 102.38 டிகிரி, புதுச்சேரியில் 102.2 டிகிரி, சேலத்தில் 104.54 டிகிரி, திருச்சியில் 107.24 டிகிரி, திருத்தணியில் 113.18 டிகிரி, வேலூரில் 110.48 டிகிரி என பதிவாகி உள்ளது.

எனது குடும்பம், சொத்து எல்லாமே நீங்கள் தான்.. ரேபரேலி வாக்காளர்களுக்கு சோனியா உருக்கமான கடிதம் எனது குடும்பம், சொத்து எல்லாமே நீங்கள் தான்.. ரேபரேலி வாக்காளர்களுக்கு சோனியா உருக்கமான கடிதம்

இந்நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று கோடை மழை பெய்யும் என ஆறுதல் தகவல் வந்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் மாநிலத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதேபோல, கர்நாடகாவில் நேற்றிரவு கனமழை பெய்த நிலையில் இன்றும் உள்மாவட்டங்களில் கனமழைக்கு அதிக வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

English summary
Indian meteorological centre says that Moderate rain Tamilnadu in the next 24 hours
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X