சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புலிக்குட்டிகள் இன்று முதல் பார்வைக்கு... வண்டலூர் வாங்க... ஜாலியாக போங்க

Google Oneindia Tamil News

Recommended Video

    வண்டலூர் பூங்காவில் பொதுமக்களின் பார்வைக்காக 3 புலிக்குட்டிகள் வைக்கப்பட்டுள்ளன-வீடியோ

    வண்டலூர்: வண்டலூர் பூங்காவில் பொதுமக்களின் பார்வைக்காக இரண்டு கரும்புலிக்குட்டிகள், ஒரு வெள்ளைப் புலிக்குட்டி என 3 புலிக்குட்டிகளை இன்று முதல் பொதுமக்கள் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கோடை விடுமுறையை குதூகலிக்க சிறந்த இடங்களில் ஒன்று, வண்டலூர் உயிரியல் பூங்கா, சிறுவர்களுக்கு உற்சாகத்தையும், பார்ப்பவர்களுக்கு பரவசத்தை அள்ளித்தரும் இந்த பூங்காவில் புதிய வரவாக மூன்று புலிக்குட்டிகள் வந்துள்ளன.

    வர்த்தகர்களுக்கு ரூ.50 லட்சம் வரை அடமானமில்லா கடன்... பிரதமர் மோடி உறுதி வர்த்தகர்களுக்கு ரூ.50 லட்சம் வரை அடமானமில்லா கடன்... பிரதமர் மோடி உறுதி

    சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் யானைகள், புலிகள் பறவைகள் என மொத்தம் 2,000 க்கும் மேற்பட்ட வனவிலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த பூங்காவில் நம்ருதா என்ற வெள்ளைப்புலிக்கும், நகுலா என்ற ஆண் புலிக்கும் வெள்ளை மரபணு உடைய 3 குட்டிகள் கடந்த ஜனவரி மாதம் 9-ந்தேதி பிறந்தன.

    28 புலிகள்

    28 புலிகள்

    அதில் 2 குட்டிகள் அடர் வரிகளை பெற்று, அதிக கருமை நிறத்தில் காணப்பட்டன. மற்றொரு பெண் குட்டி அதன் தாயையொத்து வெண்ணிறத்தில் உள்ளது. 3 மாதமான 2 கருப்பு மற்றும் ஒரு வெள்ளைநிற புலிக்குட்டிகளை அதன் தாயான நம்ருதாவுடன் பொதுமக்களின் பார்வைக்கு தனி விலங்கு கூடத்தில் விடப்பட்டுள்ளது. இந்த குட்டிகளுடன் சேர்த்து புலிகளின் எண்ணிக்கை 28-ஆக அதிகரித்துள்ளது.

    நினைவுப்பொருட்கள்

    நினைவுப்பொருட்கள்

    இந்தநிலையில், வண்டலூர் பூங்கா நிர்வாகம் அதிகாரிகள் கூறியிருப்பதாவது: வண்டலூர் பூங்காவில் கோடை காலத்தை சிறப்பாக கழிக்க பார்வையாளர்களுக்காக சில புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. பூங்கா கடை ஒன்றை திறந்து அதில் விலங்குகளின் படங்கள் பொறித்து நினைவுப்பொருட்கள், சாவிக்கொத்து, குல்லா, பனியன்கள், பொம்மைகள் முதலான பொருட்கள் பார்வையாளர்கள் வாங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளது.

    மறக்க முடியாத அனுபவம்

    மறக்க முடியாத அனுபவம்

    வெகுவிரைவில் இந்த கடையில் விலங்கு சார்ந்த நிறைய பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளன. முப்பரிமாண படக்காட்சியான வனஉலாவிடம் கடல் நீரடி காட்சிகள் பூங்காவில் தொடங்கப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று, ஏராளமான பார்வையாளர்கள் கண்டுக்களித்து தங்களது வருகையை மறக்க முடியாத அனுபவமாக மாற்றி உள்ளது என தெரிவித்துள்ளனர்.

    பொதுமக்கள் பார்வையிடலாம்

    பொதுமக்கள் பார்வையிடலாம்

    மேலும், புதிய வரவான புலிக்குட்டிகள் கடந்த 4 மாதங்களாகத் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தன. தற்போது, அதன் தாயான நம்ருதாவுடன் விலங்கு கூடத்தில் விடப்பட்டுள்ளன. இன்று( சனிக்கிழமை) முதல் புலிக்குட்டிகளை பொதுமக்கள் பார்வையிடலாம் என்றும் கூறியுள்ளனர்.

    English summary
    Vandaloor Zoo: The public can view 3 tiger cubs From Today
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X