சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாஜக அரசின் உண்மையான முகம் தெரியத் தொடங்கிவிட்டது.. ப.சிதம்பரம் ட்வீட்

Google Oneindia Tamil News

சென்னை: மும்மொழித் திட்டத்தை அறிவித்திருப்பதன் மூலம் பாஜகவின் உண்மையான முகம் தெரியத் தொடங்கிவிட்டது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஆறாம் வகுப்பிலிருந்து இந்தி மொழியைக் கட்டாயமாக பயிற்றுவிக்க வேண்டும் என்று கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைத்துள்ளது. கஸ்தூரி ரங்கன் குழு தேசியக் கல்விக் கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போகிரியால் நிஷாங்கிடம் நேற்று ஒப்படைத்துள்ளது.

The real face of the BJP government has begun to know P. Chidambaram tweeted

கஸ்தூரி ரங்கன் குழு தயாரித்துள்ள 484 பக்க தேசிய கல்விக் கொள்கையில் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியம் குழு அளித்த பரிந்துரைகள் முழுமையாக ஏற்கப்பட்டு இருக்கின்றன. மேலும், இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தியை பயிற்றுவிக்க வேண்டும்.

அதற்காக மும்மொழிக் கொள்கையை கட்டாயமாக்க வேண்டும். இந்தி பேசாத மாநிலங்களில் அந்தந்த மாநில தாய்மொழி, ஆங்கிலம் தவிர இந்தி மொழியைக் கட்டாயப் பாடம் ஆக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டு இருப்பது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தி பேசாத மாநில மக்களின் மீது இந்தியை திணிக்கும் இம்முயற்சி நாட்டின் பன்முகத் தன்மையைச் சீர்குலைத்து விடும். இந்தி பேசாதவர்களை இரண்டாந்தர குடிமக்களாக மாற்றி விடும். எனவே இத்திட்டத்தினை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என மும்மொழி கொள்கைக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், பாஜக தேர்தல் அறிக்கையிலேயே இந்தி திணிப்புக்கு கொடி அசைத்திருந்தார்கள் என்பதை நான் தேர்தலின் போதே சுட்டிக் காட்டியிருந்தேன் என குறிப்பிட்டுள்ளார்.

சூப்பர்ல்ல.. முதல் பந்திலேயே சிக்ஸர் அடிச்சிட்டாரு பாரிவேந்தர்.. முதல் வாக்குறுதி நிறைவேற போகுது! சூப்பர்ல்ல.. முதல் பந்திலேயே சிக்ஸர் அடிச்சிட்டாரு பாரிவேந்தர்.. முதல் வாக்குறுதி நிறைவேற போகுது!

மேலும், இந்த முயற்சிக்கு தேர்தல் அறிக்கை சூட்டிய தலைப்பு -- பாரதிய மொழிக் கலாச்சாரம். சமஸ்கிருத மொழியைப் பரப்புவோம் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. இந்தி மொழி கட்டாயப் பாடம் என்றால் இந்தி திணிப்பு என்று பொருள். பள்ளிகளில் மும்மொழித் திட்டம் என்றால் என்ன அர்த்தம்? இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்குவார்கள் என்று பொருள். பாஜக அரசின் உண்மையான முகம் தெரியத் தொடங்கிவிட்டது.

புதிய கல்விக் கொள்கையில் பள்ளிகளில் முதல் வகுப்பிலிருந்தே மும்மொழித் திட்டம் என்று அறிவித்திருக்கிறார்கள். நாம் தமிழ்நாட்டைச் சார்ந்த இந்தியப் குடிமக்களாகப் பெருமையுடன் இருப்போம், இணைந்து பணியாற்றுவோம் என்றும் பதிவிட்டுள்ளார்.

English summary
Stop Hindi Imposition: The real face of the BJP government has begun to know P. Chidambaram tweeted
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X