சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டேட்டா வெளியிட்டு மாட்டிய விஜயபாஸ்கர்? கணக்கு பார்த்து வழக்கு போட்ட லஞ்ச ஒழிப்புத்துறை- என்ன நடந்தது

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, எம். ஆர் விஜயபாஸ்கர், கேசி வீரமணி ஆகியோர் வீடுகளில் நடத்தப்பட்ட ரெய்டுகளை தொடர்ந்து தற்போது முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடுகளிலும் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசியலில் ஹாட் டாப்பிக்காக மாறி இருக்கும் இந்த ரெய்டுக்கு பின் விஜயபாஸ்கர் வெளியிட்ட சில சொத்து விவரங்கள்தான் காரணமாக மாறியுள்ளது.

2016 முதல் 2021 ஆண்டு காலங்களில் அமைச்சராக இருந்த போதுதான் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இந்த புகார் வைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் வீடு, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருச்சி உள்ளிட்ட 43 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருகிறார்கள்.

அதிகாலை 7 மணிக்கு 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒரே நேரத்தில் விஜயபாஸ்கரின் சென்னை வீடு உட்பட 43 இடங்களில் ரெய்டு நடத்தி வருகிறார்கள்.

5 வருடத்தில் பலகோடி சொத்து குவிப்பு.. A1 விஜயபாஸ்கர்.. A2 யார்? லஞ்ச ஒழிப்புத்துறை FIR சொல்வது என்ன? 5 வருடத்தில் பலகோடி சொத்து குவிப்பு.. A1 விஜயபாஸ்கர்.. A2 யார்? லஞ்ச ஒழிப்புத்துறை FIR சொல்வது என்ன?

காரணம்

காரணம்

2016 ஆம் ஆண்டு தேர்தலின் போது ரூ.6 கோடியே 41 லட்சம் வருமானம் இருப்பதாக விஜயபாஸ்கர் தனது தேர்தல் வேட்பு மனுவில், வருமான வரித்துறை கணக்கிலும் கணக்கு காண்பித்துள்ளார். 2021 ஆம் ஆண்டு தேர்தலின் போது ரூ.58 கோடி வருமானம் இருப்பதாக கணக்கு காண்பித்துள்ளார். அதோடு செலவு போக 51 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக கூறியுள்ளார். இதை அவரேதான் தேர்தல் ஆணையத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். இவர் வெளியிட்டு இருக்கும் இந்த டேட்டாதான் அவருக்கே சிக்கலாக முடிந்துள்ளது.

வருமான வரித்துறை சோதனை

வருமான வரித்துறை சோதனை

ஏனென்றால் அவர் தனது வருமான வரித்துறை தாக்கல் கணக்கிலும், வேட்பு மனு தாக்களிலும் செலவு கணக்கு செய்தாக ரூ.34 கோடி கணக்கு காண்பித்துள்ளார். கணக்குபடி அவர் 24 கோடி ரூபாய்க்கு மட்டும்தான் சொத்துக்கள் வாங்கி இருக்க முடியும். அதாவது மொத்த வருமானம் 58 கோடி ரூபாயில் செலவு கணக்கு ரூ.34 கோடியை காண்பித்துள்ளார். மீதம் உள்ளபடி 24 கோடி ரூபாய்க்கு மட்டும்தான் சொத்துக்கள் வாங்கி இருக்க முடியும்.

செலவு கணக்கு

செலவு கணக்கு

ஆனால் தனக்கு 51 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக சொத்து கணக்கு காட்டி இருக்கிறது. செலவு போக போக இருப்பதே 24 கோடி ரூபாய்தான் எனும் போது எப்படி 51 கோடி ரூபாய் சொத்து சேர்த்து இருக்க முடியும் என்பதுதான் வழக்கே. இந்த மீதமுள்ள 27 கோடி ரூபாய் வரையிலான சொத்து எப்படி வாங்கப்பட்டது என்ற கணக்கு இல்லாத காரணத்தால் இந்த ரெய்டு நடப்பதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த சொத்துக்களை எல்லாம் மனைவி பெயரிலும், பினாமி பெயரிலும் வாங்கியதாக விஜயபாஸ்கர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

பினாமி

பினாமி

அதாவது விஜயபாஸ்கர் பதவி செய்த வருமான மற்றும் செலவின விவரங்களை வைத்து அவருக்கே லஞ்ச ஒழிப்புத்துறை செக் வைத்துள்ளது. அதாவது ரெய்டு எல்லாம் நடக்கும் முன்பே இந்த முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 14 கல்வி நிறுவனங்களின் பெயர்களை லஞ்ச ஒழிப்புத்துறை பட்டியலில் சேர்த்து உள்ளது. கடந்த 2016க்கு பின் சேர்க்கப்பட்ட முறைகேடான சொத்துக்கள் மூலம் இந்த கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக லஞ்ச ஓழிப்புத்துறை தனது எப்ஐஆரில் குறிப்பிட்டுள்ளது.

Recommended Video

    விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம் உட்பட 43 இடங்களில் ரெய்டு… மனைவி ரம்யா மீதும் வழக்குப்பதிவு... லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி
    ரெய்டு

    ரெய்டு

    பினாமி பெயரில் இந்த கல்வி நிறுவனங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், லஞ்சம், முறைகேடாக சேர்க்கப்பட்ட சொத்துக்கள் ஆகியவற்றின் மூலம் தொண்டு நிறுவனங்களை தொடங்கி அதில் வந்த வருமானம் மூலம் இந்த கல்வி நிறுவனங்களை தொடங்கி இருக்கலாம் என்று புகாரில் கூறப்பட்டுள்ளது. 27 கோடி ரூபாய் சொத்து குவிப்பு என்பது மிக மிக அதிகம் என்பதால் இந்த வழக்கு கண்டிப்பாக வலுவான ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    What are the reason behind the Directorate of Vigilance and Anti-Corruption raid at Ex-Minister Vijayabaskar?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X