சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏன் இப்படி பண்ணுனீங்க? தீக்குளித்தவரை விசாரிக்க சொன்ன முதல்வர்.. நேரில் சந்தித்த மா.சு.. பரபர காரணம்

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் மு.க ஸ்டாலின் வீட்டு முன்பு தீக்குளித்தவர் எதற்காக விபரீத முடிவை எடுத்தார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இவரை நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார்.

Recommended Video

    முதல்வர் ஸ்டாலின் வீட்டின் முன்பு திடீரென தீக்குளித்த நபர்... வெளியான பரபரப்பு தகவல்!

    சென்னை செனடாப் ரோட்டில் உள்ள முதல்வர் மு க ஸ்டாலின் வீட்டு முன்பு வெற்றிமாறன் என்ற நபர் இன்று தீக்குளித்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதிக பாதுகாப்பு நிரம்பிய அந்த பகுதிக்கு வந்தவர், திடீரென அங்கே தீக்குளித்தார்.

    அதிர்ஷ்டவசமாக அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார் துரிதமாக செயல்பட்டு அவரை மீட்டனர். வேகமாக தீயை அணைத்த காரணத்தால் அவர் 40 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்டார்.

    முதல்வர் ஸ்டாலின் கிளம்பும் நேரம்.. வீட்டுக்கு முன்பாக தீக்குளித்த நபர்! பெரும் பரபரப்பு முதல்வர் ஸ்டாலின் கிளம்பும் நேரம்.. வீட்டுக்கு முன்பாக தீக்குளித்த நபர்! பெரும் பரபரப்பு

    ஆபத்து

    ஆபத்து

    ஆனாலும் உடலில் 40 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டால் அது பெரிய பாதிப்பை ஏற்படும். உடனடியாக தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும். இதனால் தீக்குளித்த வெற்றி மாறனை போலீசார் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். முதல்வரின் வீடு முன்பு நடந்த இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கண்டிப்பாக முக்கிய கோரிக்கை இல்லாமல் ஒருவர் முதல்வரின் வீடு முன் வந்து தற்கொலைக்கு முயற்சி செய்ய மாட்டார் என்பதால் உடனடியாக இது பற்றி விசாரிக்கும்படி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    சுகாதாரத்துறை அமைச்சர்

    சுகாதாரத்துறை அமைச்சர்

    தீக்குளித்த நபரை நேரில் சென்று சந்தித்து அவரை நலம் விசாரிக்கும்படி சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியமிற்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்ற சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தீக்காயங்களுக்கு சிகிச்சை பெற்றுவந்த வெற்றிமாறன் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், ஏன் இப்படி பண்ணுனீங்க.. எதற்காக தீக்குளித்தீர்கள் என வெற்றிமாறனிடம் கேட்டறிந்தார்.

    பதில்

    பதில்

    இதற்கு பதில் அளித்த வெற்றிமாறன், நான் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளித்து தென்காசி திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பணிகளை செய்தேன்.இந்த முறை உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட முயன்றேன். குருவிகுளம் தொகுதிக்குட்பட்ட ஜமீன் தேவர்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு நானும், எனது மனைவியும் கடந்த 22ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தோம். ஆனால் எனக்கு எதிராக கடும் மிரட்டல் வந்தது.

    ஊராட்சி தலைவர்

    ஊராட்சி தலைவர்

    முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலகிருஷ்ணன் என்பவர் எனக்கு எதிராக சதி செய்தார். தன்னுடைய பலத்தை பயன்படுத்தி எனக்கு எதிராக செயல்பட்டார். பல லட்சம் ரூபாய் லஞ்சப் பணம் கொடுத்து எங்களது வேட்பு மனுவை நிராகரிக்க செய்துள்ளார். அவரின் அழுத்தம் காரணமாக எனது மனுவை நிராகரித்து உள்ளனர்.

    விளக்கம்

    விளக்கம்

    லட்சக்கணக்கில் பணத்தை பெற்றுக்கொண்டு பிரபு என்ற அதிகாரியும் எனது மனுவை நிராகரித்துள்ளனர். நீங்கள்தான் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த நபர் உடல் முழுவதும் தீ காயங்களுடன் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியத்திடம் நடந்த விஷயங்களை குறிப்பிட்டார். அதோடு முதல்வரிடம் கொடுக்கும்படி இது தொடர்பான மனுவையும் அவர் அமைச்சரிடம் வழங்கினார்.

    உறுதி

    உறுதி

    அவர் கொடுத்த மனுவை பெற்றுக்கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் வெற்றிமாறனிடம், முதலமைச்சர் உங்களது உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். விரைவில் உங்கள் மனு மீதான நடவடிக்கை எடுக்கப்படும், கவலைப்பட வேண்டாம் என்று கூறி அங்கிருந்து கிளம்பிச் சென்றார்

    English summary
    The reason behind the suicide attempt in front of TN CM Stalin house today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X