சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

துரைமுருகனை பற்றி என்ன பேசினார் குடியாத்தம் குமரன்... நீக்கத்திற்கான பின்னணி

Google Oneindia Tamil News

Recommended Video

    துரைமுருகனை பற்றி என்ன பேசினார் குடியாத்தம் குமரன்-வீடியோ

    சென்னை: திமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக இருந்த குடியாத்தம் குமரன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    இதற்கு காரணம் திமுக பொருளாளர் துரைமுருகன் தான் என திமுக சொற்பொழிவாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

    the reason for the gudiyatham kumaran expelled from dmk party

    வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை பூர்வீகமாக கொண்ட குமரன் தனது மாணவப் பருவத்தில் இருந்து திமுக மேடைகளில் முழங்கி வருகிறார். தொடக்கத்தில் துரைமுருகனின் தீவிர ஆதரவாளராக இருந்த அவர், ஒரு கட்டத்தில் அந்த நிலைப்பாட்டிலிருந்து மாறினார். துரைமுருகனை நம்பி காலம் தான் கரைந்ததே தவிர வேறொன்றும் நடக்கவில்லை என குமரன் கூறியதாக திமுக பேச்சாளர் ஒருவர் கூறுகிறார்.

    இந்நிலையில், வேலூர் மக்களவைத் தொகுதியில் துரைமுருகன் தனது மகன் கதிர் ஆனந்தை நிறுத்தி வெற்றி பெற வைத்துள்ளார். இது தொடர்பாக கட்சிக்காரர் ஒருவரிடம் தொலைபேசியில் பேசிய குடியாத்தம் குமரன், போட்டியிட வேறு ஆளே இல்லையா எனத் தொடங்கி துரைமுருகனை பற்றி தனது உள்ளக்குமுறலை கொட்டினாராம்.

    உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராக இருங்கள்... கட்சியினருக்கு புத்துணர்வு ஊட்டும் ஜி.கே.வாசன்உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராக இருங்கள்... கட்சியினருக்கு புத்துணர்வு ஊட்டும் ஜி.கே.வாசன்

    அதனை ரெக்கார்டு செய்த அந்த நபர் துரைமுருகனிடம் போட்டுக்காண்பித்துள்ளார். அதைக்கேட்டு கொதித்துப்போன துரைமுருகன், குடியாத்தம் குமரனை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என பிடிவாதம் பிடித்துள்ளார். இதையடுத்து அவர் தற்காலிக இடைநீக்கம் செய்யப்படுவதாக பொதுச்செயலாளர் பெயரில் அறிவிப்பு வெளியானது.

    பொருளாளர் பதவிக்கு உரிய மரியாதையை தராமல் இப்படியா பேசுவது என, குமரனிடம் திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா கடிந்துகொண்டாராம்.

    English summary
    the reason for the gudiyatham kumaran expelled from dmk party
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X