சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இது கலைஞர் திமுக அல்ல.. அதிமுகவுக்கு ராமதாஸ் மாற இதுதான் காரணமாம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    இந்த காரணங்களுக்காக தான் அதிமுக கூட்டணியில் இணைந்தோம் - விளக்கிய ராமதாஸ் -வீடியோ

    சென்னை: அதிமுக – பாமக கூட்டணி அமைந்து விட்டது ஒருவழியாக, 10 கோரிக்கைகள் அல்லது நிபந்தனைகள் பாமக தரப்பில் முன் வைக்கப்பட்டுள்ளது. அதிமுக தரப்பில் நடைபெறவுள்ள 21 தொகுதி இடைதேர்தலுக்கு பாமக அதிமுகவிற்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது. பாமகவும் அதை ஒத்துக் கொண்டுள்ளது. இப்போது பாமகவும் அதிமுகவும் கை குலுக்கி கொண்டுள்ளனர்.

    இந்நிலையில் திமுகவுடன் கூட்டணி அமைப்பது என்று தீராத காதலோடு இருந்துள்ளார் ஜூனியர் ராமதாஸ். ஆனால் இப்போது சீனியர் ராமதாசின் விருப்பப் படி அதிமுகவோடு கூட்டணி அமைந்து விட்டது. சீனியர் ராமதாஸ் திமுகவை ஏன் வேண்டாம் என்பதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

    இப்போதிருக்கும் திமுக கலைஞர் திமுக அல்ல என்று முதலில் உணர்த்திய ராமதாஸ் கலைஞர் காலம் என்றால் நாம் கூறுவதை கேட்பார். ஆனால் இது ஸ்டாலின் திமுக. நாம் கூறுவதை அவர் கேட்கப் போவதில்லை என்று கூறினாராம்.

    ஸ்டாலின் உதவ மாட்டார்

    ஸ்டாலின் உதவ மாட்டார்

    முன்பை போல காங்கிரஸ் அரசு அமைந்தாலும் மத்திய அமைச்சர் பதவிக்கு ஸ்டாலின் நிச்சயமாக பாமகவுக்கு உதவ மாட்டார் என்று ராமதாஸ் உறுதியாக நம்பியுள்ளார். இதையே அவர் ஜூனியர் ராமதாசிடம் எடுத்துக் கூறியுள்ளதாக கூறுகின்றனர் பாமகவினர். ஸ்டாலின் தலைமையேற்ற பிறகு திமுகவில் தங்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது என்பதையும் உணர்ந்தே இருந்துள்ளார் ராமதாஸ்.

    ஸ்டாலின் மதிக்கலையே

    ஸ்டாலின் மதிக்கலையே

    ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்றபோது அவருக்கு பல கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். தனக்கு வாழ்த்து கூறியவர்களுக்கு நேரில் சென்று நன்றி கூறியுள்ளார் ஸ்டாலின். ஆனால் தன்னை ஸ்டாலின் தேடி வரவில்லை என்பது சீனியர் ராமதாசுக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது. மெரீனா கடற்கரையில் கருணாநிதியை அடக்கம் செய்தபோது மெரீனா தொடர்பான சில வழக்குகள் நிலுவையில் இருந்தன.

    ஸ்டாலின் நன்றி சொல்லலையே

    ஸ்டாலின் நன்றி சொல்லலையே

    அதில் ஒரு வழக்கு பாமக வழக்கறிஞர் பாலு தொடுத்த வழக்கு. அந்த வழக்கை வாபஸ் வாங்க சொன்னது சீனியர் ராமதாஸ். ஆனால் ஸ்டாலின் பாலுவுக்கு மட்டும் நன்றி தெரிவித்துள்ளார். ராமதாசை அவர் கண்டுகொள்ளவே இல்லை என்று கூறப்படுகிறது. அதன் பின்னர் கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கும் ராமதாசை உரிய முறையில் அழைக்கவில்லை என்ற வருத்தமும் பாமக தரப்பில் இருந்துள்ளது. அவரது பெயர் எழுதப்பட்ட அழைப்பிதழை யாரோ சில திமுகவினர் ஏ.கே மூர்த்தியின் அலுவலகத்திற்கு சென்று கொடுத்துள்ளனர்.

    முதலுக்கே மோசமாகும்

    முதலுக்கே மோசமாகும்

    இந்த காரணங்கள் எல்லாவற்றையும் அடுக்கிய ராமதாஸ் இறுதியாக திமுக அணியில் இருந்தால் வரும் சட்டமன்ற தேர்தலில் அவருக்கு போட்டியாக நாமும் முதல்வர் வேட்பாளர் என்ற கோஷத்தோடு களத்தில் இறங்க முடியாது என்று கூறியுள்ளார். இப்படி பல காரணங்கள், அதோடு வரும் தேர்தலுக்கு திமுக அணியில் தொகுதிகள் மட்டுமே கொடுப்பதாக கூறியுள்ளனர் ஆனால் அதிமுக அணியில் தொகுதிகளோடு தேர்தல் செலவுகளையும் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதனால்தான் திமுக கூட்டணியை ஒதுக்கிய ராமதாஸ் அதிமுக கூட்டணியை டிக் அடித்தாராம்.

    English summary
    Why PMK decided to go with ADMK?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X