சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரவுடி வல்லரசு என்கவுண்டர்.. விசாரணையை தானே முன்வந்து கையில் எடுத்தது மனித உரிமை ஆணையம்

வல்லரசு என்கவுண்டர் வழக்கில் மனித உரிமை ஆணையம் அறிக்கை கேட்கிறது

Google Oneindia Tamil News

சென்னை: ரவுடி வல்லரசு என்கவுண்டர் குறித்து விரிவாக விசாரணை நடத்தி அதை இன்னும் 8 வாரங்களில் மனித உரிமை ஆணைய டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆணைய தலைவர் நீதிபதி மீனாகுமாரி அதிரடியாக உத்தரவு போட்டுள்ளார்.

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவுடி வல்லரசு. 20 வயதான்! ஆனால் அதற்குள், இவர்மீது 2 கொலை வழக்கு, கொலை முயற்சி, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட கேஸ்கள் பல ஸ்டேஷன்களில் பதியப்பட்டுவிட்டது.

ஒரு வழிப்பறி வழக்கு சம்பந்தமாக இவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். அப்போதுதான் போற, வர்றங்ககிட்ட, வல்லரசு கத்தியை காட்டி மிரட்டி, வேலையை காட்டி கொண்டிருக்கிறார் என்ற தகவல் போலீசுக்கு கிடைத்தது.

பக்கா பிளான்.. மெல்ல மெல்ல லவட்டி.. அதிர வைத்த சுதா.. ஷாக்கில் ஐசரி வேலன் குடும்பம் பக்கா பிளான்.. மெல்ல மெல்ல லவட்டி.. அதிர வைத்த சுதா.. ஷாக்கில் ஐசரி வேலன் குடும்பம்

தனிப்படை அமைப்பு

தனிப்படை அமைப்பு

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வியாசர்பாடி போலீசார், பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டி கொண்டிருந்த வல்லரசுவை பிடிக்க முயன்றனர். அப்போது நடந்த தாக்குதலில், 2 போலீசாருக்கு பலத்த அடி விழுந்தது. உடனே போலீசாரும் பவுன்ராஜை பிடிக்க தனிப்படை அமைத்து வல்லரசுவை தேடினர்.

என்கவுண்ட்டர்

என்கவுண்ட்டர்

அப்போது, மாதவரம் பஸ் ஸ்டேண்ட் பின்பக்கம் வல்லரசு பதுங்கியிருப்பதாக நடுராத்திரி 2 மணிக்கு தகவல் கிடைத்து விரைந்தது போலீஸ். ஆனால் அவர்களை கண்டதும் ரவுடி தப்பியோட முயன்றதுடன், பிரேம்குமார், தீபன் ஆகிய போலீசாரையும் அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார். அப்போதுதான் வல்லரசுவை துப்பாக்கியால் போலீசார் சுட்டுள்ளனர். உடம்பில் 3 குண்டுகள் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே ரவுடி வல்லரசுவின் உயிர் பிரிந்தது.

மனித உரிமை ஆணையம்

மனித உரிமை ஆணையம்

இவரது கூட்டாளிகளான கதிரவன், கார்த்திக் இருவரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இது சம்பந்தமான விசாரணையும் நடந்து வருகிறது. இந்நிலையில், ரவுடி வல்லரசு என்கவுண்டர் வழக்கை மனித உரிமை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டுள்ளது.

அறிக்கை தேவை

அறிக்கை தேவை

இந்த என்வுண்டர் குறித்து விரிவாக விசாரணையை நடத்திமுடித்து, அது சம்பந்தமான அறிக்கையை இன்னும் 8 வாரங்களில் தாக்கல் செய்ய ஆணைய தலைவர் நீதிபதி மீனாகுமாரி உத்தரவிட்டுள்ளார். இன்னும் 6 வாரங்களில் இதுசம்பந்தமான விரிவான அறிக்கை தேவை என தமிழக பொதுத்துறை செயலாளருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

English summary
TN Human Rights Commission has ordered that report be filed within 8 week on Vallarasu encounter Case
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X