சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கமலுடன் கை கோர்த்த செ. கு. தமிழரசன்.. ஒரு லோக்சபா, 3 சட்டசபைத் தொகுதிகளில் போட்டி!

Google Oneindia Tamil News

Recommended Video

    EXCLUSIVE: மனம் திறந்த செ.கு.தமிழரசன்

    சென்னை:கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன், இந்திய குடியரசு கட்சி கூட்டணி அமைத்துள்ளது.

    லோக்சபா தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும் அறிவித்துவிட்டதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

    இரு கட்சிகளும் தமது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுவிட்டன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது.

    18 பேருக்கும் ஸ்கெட்ச்.. குறி வைக்கப்படும் அமமுக வேட்பாளர்கள்.. முறியடிப்பாரா தினகரன் 18 பேருக்கும் ஸ்கெட்ச்.. குறி வைக்கப்படும் அமமுக வேட்பாளர்கள்.. முறியடிப்பாரா தினகரன்

    விருப்ப மனுக்கள்

    விருப்ப மனுக்கள்

    அதற்காக, லோக்சபா மற்றும் இடைத்தேர்தல்களில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. லோக்சபா தேர்தலில் போட்டியிட ஆயிரத்து 132 பேரும், இடைத்தேர்தலில் போட்டியிட 150 பேரும் விருப்பமனு அளித்தனர்.

    நேர்காணல் முடிந்தது

    நேர்காணல் முடிந்தது

    இதனையடுத்து கமல்ஹாசன் முன்னிலையில் வேட்பாளர் நேர்காணல் நடந்து முடிந்தது. அதனை தொடர்ந்து... மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் லோக்சபா மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை நாளை மதியம் 2 மணிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    [உங்க எம்பியோட சொத்து விவரம் தெரியுமா.. அடேங்கப்பா தகவல்கள்]

    தனித்தே போட்டியிட முடிவு

    தனித்தே போட்டியிட முடிவு

    40 லோக்சபா தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளில் தனித்து போட்டியிட கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தயாராகி வந்தது. இந்நிலையில், அந்த கட்சியுடன், இந்திய குடியரசு கட்சி கூட்டணி அமைத்துள்ளது.

    கூட்டணி சேர்ந்தது

    கூட்டணி சேர்ந்தது

    லோக்சபா தேர்தலில் 1 தொகுதியிலும், இடைத்தேர்தலில் 3 தொகுதிகளிலும் இந்திய குடியரசுக் கட்சி போட்டியிடுகிறது. மேலும் மக்கள் நீதி மய்யத்தின் டார்ச் லைட் சின்னத்திலேயே போட்டியிட உள்ளதாக செ.கு.தமிழரசன் அறிவித்துள்ளார்.

    English summary
    The Republican Party of India led by se.ku. Tamilarasan joined with Kamal Hassan's People's Justice Party.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X