சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பொருளாதார வளர்ச்சிக்கு நதிகள் இணைக்கப்பட வேண்டும்.. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கருத்து

Google Oneindia Tamil News

சென்னை: கட்சிகளால் வேறுபட்டிருந்த தமிழகத்தை காவிரி ஆறு ஒற்றுமைப்படுத்தியது என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறியுள்ளார். நதிகள் இணைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற காவிரியின் புனிதமும் போராட்டமும் என்கிற புத்தகத்தை வெளியிட்டு விழாவில் பேசிய அவர், காவிரி விவகாரத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை மத்திய அரசிடம் தெரிவித்தாக குறிப்பிட்டார்.

The rivers must be connected, Governor Panwarilal Purohit Talk

நதிகள் இணைக்கப்பட்டால் நாடு ஒருங்கிணையும், பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்ற அவர், தென் இந்தியா முதல் வட இந்தியா வரை உள்ள ஆறுகள் இணைக்கப்பட வேண்டும் என்றார். காவிரி விவகாரத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் தனிப்பட்ட முறையில் தெரிவித்ததாகவும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குறிப்பிட்டார்.

விழாவில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் இல. கணேசன், அதிமுக ஆட்சிக்கு ஆபத்து வராது என்றும், அதிக இடங்களில் அதிமுக வெற்றி பெறும் எனவும் கருத்து கூறினார்.

தமிழ் மாணவர்களால் டெல்லியில் கல்வி உரிமை பறிபோகிறதா?.. கேஜ்ரிவாலுக்கு ஒரு தமிழ் மாணவர்களால் டெல்லியில் கல்வி உரிமை பறிபோகிறதா?.. கேஜ்ரிவாலுக்கு ஒரு "பொளேர்" கடிதம்!

மேலும், ஏழு பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் முடிவெடுப்பார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். நல்லகண்ணுவிற்கு அரசு தரப்பிலிருந்து வீடு வழங்க வேண்டுமெனவும் அவர் விழாவின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசினார்.

English summary
Governor Panwarilal Purohit Said That rivers must be connect
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X