சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தென்மேற்கு பருவமழை செப்டம்பர் வரை நீடிக்கும்.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.. தமிழகத்தில் நல்ல மழை

Google Oneindia Tamil News

சென்னை: தென்மேற்கு பருவமழை, வரும் செப்டம்பர் மாதம் வரை தொடரும் என்று, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Recommended Video

    SouthWest Mansoon will continue till september, says IMD

    தென்மேற்கு பருவமழை தொடங்கிய ஜூன் மாதத்தில் நாட்டில் பரவலாக மழை பொழிவும் குறைவாக இருந்தது. ஆனால் படிப்படியாக இது அதிகரித்தது. இதுவரை, தென்மேற்கு பருவமழை காலகட்டத்தில், தென் தமிழகத்தில் 13 சதவீதம் அளவிற்கு கூடுதலாக மழை பெய்துள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வடகிழக்கு மாநிலங்களில் 12 சதவீதம் கூடுதலாக மழைப்பொழிவு இருந்ததாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரம் வடமேற்கு மாநிலங்களில் மழை குறைந்திருந்தது. மத்திய இந்தியப் பகுதிகளில் 3 சதவீதம் குறைவாக தென்மேற்கு பருவமழை பொழிவு இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

    நீங்கள் சென்னைவாசியா.. அரசு அனுமதிச்சிடுச்சேன்னு உட்கார்ந்து சாப்பிட ஹோட்டலுக்கு இன்று போயிறாதீங்க நீங்கள் சென்னைவாசியா.. அரசு அனுமதிச்சிடுச்சேன்னு உட்கார்ந்து சாப்பிட ஹோட்டலுக்கு இன்று போயிறாதீங்க

    தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

    தென்மேற்கு பருவமழை செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும் என்றும் ஆகஸ்ட் மாதத்தில் பரவலாக 97 சதவீதம் அளவுக்கு பருவமழை இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இடியுடன் மழை

    இடியுடன் மழை

    வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, மற்றும், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    சென்னை மழை

    சென்னை மழை

    நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. டெல்டா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த நான்கு தினங்களாக மழை பெய்து வருகிறது. வேளாங்கண்ணி, நாகூர், திருக்குவளை உள்ளிட்ட இடங்களில் விடிய விடிய பெய்த மழையால் சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    டெல்டா மாவட்டங்கள்

    டெல்டா மாவட்டங்கள்

    குறுவை சாகுபடி செய்த நிலங்களில் மழைநீர் தேங்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இலுப்பூர், அன்னவாசல், கந்தர்வகோட்டை மற்றும் சித்தன்னவாசலில் ஒரு மணி நேரத்திற்கு மேல் மழை நீடித்தது. தஞ்சை, திருவையாறு மற்றும் கும்பகோணம் பகுதிகளில் கனமழை பெய்தது.

    நாகப்பட்டினம் மழை

    நாகப்பட்டினம் மழை

    நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, நாகூர், சிக்கல், கீழ்வேளூர், திருக்குவளை, விழுந்தமாவடி, திருமருகல் உள்ளிட்ட இடங்களில் இரவு முழுவதும் விடிய விடிய கனமழை பெய்துள்ளது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    English summary
    The southwest monsoon will continue till September, according to the Indian Meteorological Department. Rainfall in the country was also low in June, when the southwest monsoon began. But gradually it increased. So far, during the southwest monsoon season, southern Tamil Nadu has received an additional 13 per cent rainfall, according to the Indian Meteorological Department.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X