சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இடைக்கால பட்ஜெட்: எந்தெந்த துறைகளுக்கு, எவ்வளவு நிதி ஒதுக்கீடு தெரியுமா... இதை படிங்க!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சென்னை கலைவாணர் அரங்கில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையில் துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் இடைக்கால பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார்.

இந்த அறிவிப்பில் பல்வேறு திட்டங்கள் இடம் பெற்று வருகின்றன. ஒவ்வொரு பட்ஜெட்டிலும் துறை வாரியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த பட்ஜெட்டில் எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது தெரியுமா? அவற்றின் விவரங்களை கீழே பாருங்கள்.

 சுகாதாரம், வேளாண்மை

சுகாதாரம், வேளாண்மை

  • சுகாதாரத் துறைக்கு ரூ.19,420 கோடி நிதி ஒதுக்கீடு
  • கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.3,352 கோடி ஒதுக்கீடு
  • பயிர் கடன் தள்ளுபடி திட்டத்துக்கு ரூ.5000 கோடி நிதி ஒதுக்கீடு
  • வேளாண்துறைக்கு ரூ.11,982 கோடி நிதி ஒதுக்கீடு
  • கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.6,683 கோடி ஒதுக்கீடு
 காவல்துறை, நீதித்துறை

காவல்துறை, நீதித்துறை

  • காவல்துறைக்கு ரூ.9,567 கோடி நிதி ஒதுக்கீடு
  • நீதித்துறை நிர்வாகத்துக்கு ரூ.1,437 கோடி ஒதுக்கீடு
  • மீன்வளத்துறைக்கு ரூ.580 கோடி நிதி ஒதுக்கீடு
  • நீர்வளத் துறைக்கு ரூ.6,453 கோடி நிதி ஒதுக்கீடு
  • உள்ளாட்சி துறைகளுக்கு ரூ.22,218 கோடி நிதி ஒதுக்கீடு
உயர்கல்வித்துறை, நெடுஞ்சாலைத் துறை

உயர்கல்வித்துறை, நெடுஞ்சாலைத் துறை

  • பிரதமர் வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ.3,700 கோடி நிதி ஒதுக்கீடு
  • நெடுஞ்சாலை துறைக்கு ரூ.18,750 கோடி நிதி ஒதுக்கீடு
  • உயர்கல்வி துறைக்கு ரூ.5478 நிதி ஒதுக்கீடு
  • கைத்தறி துறைக்கு ரூ.1,224 கோடி நிதி ஒதுக்கீடு
  • சமூக நலத்துறைக்கு ரூ.1,953 கோடி நிதி ஒதுக்கீடு
மத்திய உணவு திட்டம், புதிய மருத்துவ கல்லூரிகள்

மத்திய உணவு திட்டம், புதிய மருத்துவ கல்லூரிகள்

  • ஆதி திராவிடர் நலத்துறைக்கு ரூ.1,932 கோடி நிதி ஒதுக்கீடு
  • காவல்துறையை நவீனமயமாக்க ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு
  • மதிய உணவுத் திட்டத்துக்கு ரூ.1,953 கோடி
  • புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு ரூ.2,470 கோடி
  • அம்மா மினி கிளினிக் திட்டத்துக்கு ரூ.44 கோடி நிதி ஒதுக்கீடு
மாற்றுத்திறனாளிகள் நலன், ஸ்மார்ட் சிட்டி

மாற்றுத்திறனாளிகள் நலன், ஸ்மார்ட் சிட்டி

  • மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ரூ.688.48 கோடி நிதி ஒதுக்கீடு
  • தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தை
  • வலுப்படுத்த ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு
  • நகர்ப்புற வடிகால் திட்டத்துக்கு ரூ.1,450 கோடி நிதி ஒதுக்கீடு
  • ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ .2,350 கோடி நிதி ஒதுக்கீடு
  • சென்னையை தனித்தன்மை வாய்ந்த நகரமாக மாற்ற ரூ.3,410 கோடி நிதி ஒதுக்கீடு
மீன்பிடி துறைமுகங்கள்

மீன்பிடி துறைமுகங்கள்

  • குடிநீர் குழாய் இணைப்புகளுக்கு ரூ.3,016 கோடி நிதி ஒதுக்கீடு
  • சுகாதார வளாகங்கள் கட்டுவதற்கு ரூ .44.33 கோடி நிதி ஒதுக்கீடு
  • மீன்பிடி துறைமுகங்கள், இறங்குதளங்கள் பணிகளுக்கு ரூ.1374 கோடி நிதி ஒதுக்கீடு
மின்சாரத் துறை, அரசு பணியாளர்கள்

மின்சாரத் துறை, அரசு பணியாளர்கள்

  • மின்சாரத் துறைக்கு ரூ.7,217 கோடி நிதி ஒதுக்கீடு
  • மின்கட்ட மானியங்களுக்கு ரூ.8,834 கோடி நிதி ஒதுக்கீடு
  • பள்ளி கல்விதுறைக்கு ரூ.34,181 கோடி நிதி ஒதுக்கீடு
  • சத்துணவு திட்டங்களுக்கு ரூ.1953.98 கோடி நிதி ஒதுக்கீடு
  • அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு ரூ.1,02,049 கோடி நிதிஒதுக்கீடு
  • தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துக்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு
  • சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு

English summary
The Tamil Nadu Interim Budget has allocated funds for all sectors
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X