சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புகாரை வாங்க மறுத்த இன்ஸ்பெக்டர்.. பரபரப்பு வீடியோ வெளியிட்ட இளம்பெண்.. முதல்வருக்கு வேண்டுகோள்!

Google Oneindia Tamil News

சென்னை: புகாரை வாங்க மறுப்பதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது புகார் கூறிய இளம்பெண் முதல்வர் நடவடிக்கை எடுக்கும்படி வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது..சென்னை ஓட்டேரி ஸ்டாரன்ஸ் பகுதியை சேர்ந்தவர் பூர்ணிமா. வடமாநிலத்தைச் சேர்ந்தவர்.

இவர், ஓட்டேரி காவல் நிலைய வாசலில் தனது குழந்தையுடன் அழுதபடி முதல்-அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் கூறி இருப்பதாவது:- நான் ஒருவரிடம் எனது காரை விற்றேன். காருக்கான மாத தவணையை வங்கியில் கட்டுவதாக கூறிய அவர், கட்டாமல் இருந்ததால் வங்கியில் இருந்து என்னிடம் கேட்டனர். இதனால் காரை திரும்ப கேட்டோம்.இதுபற்றி ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் செய்தேன்.

The young woman complained to the police inspector that he refused to buy the complaint in chennai

இதையறிந்த எதிர்தரப்பை சேர்ந்த 4 பேர், போலீஸ் நிலைய வாசலிலேயே என்னை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டினர். இதுபற்றி ஓட்டேரி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டரிடம் புகார் அளித்தேன். ஆனால் அவர் வாங்க மறுத்துவிட்டார். எனது புகாரை ஏற்க போலீசார் தயாராக இல்லை. எனவே முதல்வர் மு.க.ஸ்டாலின் இதன்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த பெண் வீடியோவில் கூறி இருந்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. திடீரென ஒரு பெண் வீடியோ வெளியிட்டதால் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஓட்டேரி சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர், அந்த பெண்ணிடம் புகாரை பெற்று அவரை மிரட்டிய தாக கூறிய நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மற்றொரு சம்பவம்

சென்னை வானகரம் விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மதன் குமார்(34). இவர் சொந்தமாக ஆட்டோ மொபைல் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை 7:00 மணி அளவில் கொடுங்கையூர் சண்முகா தியேட்டர் வழியாக செல் போனில் பேசிக்கொண்டே சென்ற போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் அவர் வைத்திருந்த செல்போனை பறித்து சென்றனர்.

இது குறித்து மதன்குமார் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த கொடுங்கை யூர் குற்றப்பிரிவு போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டிவி கேமரா பதிவு களை ஆய்வு செய்தனர். அதில் 2 நபர்களின் புகைப் படங்கள் பதிவாகி இருந்தது. அதனை வைத்து போலீசார் அவர்களை தேடிவந்தனர். நேற்று மாலை கொடுங்கையூர் எருக்கஞ்சேரி நெடுஞ் சாலையில் வைத்து அவர் கள் இருவரையும் பிடித்தனர்.

சூப்பர்.. தமிழகத்தில் தொடர்ந்து சரியும் கொரோனா கேஸ்கள்.. இந்த 3 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு சதம்! சூப்பர்.. தமிழகத்தில் தொடர்ந்து சரியும் கொரோனா கேஸ்கள்.. இந்த 3 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு சதம்!

விசாரணையில் அவர்கள் பெரம்பூர் சொக்கலிங்கம் தெரு பகுதியைச் சேர்ந்த தமிழரசன் வயது 20 புளியந்தோப்பு கன்னிகா புரம் பகுதியைச் சேர்ந்த முசாகான் வயது 22 என்பது தெரிய வந்தது.இதனையடுத்து இவர்களிடம் நடத்திய சோதனையில் இவர்கள் பல்வேறு இடங்களில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் இடத்திலிருந்து 7 செல்போன் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

English summary
The young woman complained to the police inspector that he refused to buy the complaint. police registered a case against the persons who received the complaint from the woman and allegedly threatened her
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X