சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2 பொட்டி வச்சீங்களே.. ஓட்டு போடனும்னு சொன்னீங்களா அதிகாரிகளே! தேனி தொகுதியில் பெரும் குளறுபடி

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok Sabha Elections: Theni : தேனியில் தேர்தலை புறக்கணித்த மலை கிராம மக்கள்

    சென்னை: லோக்சபா, சட்டசபை என இரு தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றாலும், ஒரே தொகுதியில் மட்டுமே சில தொகுதிகளில் மக்கள் அறியாமையால் வாக்களித்துள்ளதாக கூறப்படுகிறது.

    உதாரணத்திற்கு, தேனி லோக்சபா தொகுதி மற்றும் அதற்கு உட்பட்ட, ஆண்டிபட்டி, பெரியகுளம் சட்டசபைகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு பதிவு நேற்று முன்தினம் நடந்து முடிந்தது.

    Theni: 10% voters caste their vote for just Loksabha constituency only

    எனவே ஆண்டிப்பட்டி, பெரியகுளம் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதி வாக்காளர்கள் இரு வாக்குப் பதிவு இயந்திரங்களில் ஓட்டு போட வேண்டியது அவசியம். ஆனால், தேனி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, சோழவந்தான், உசிலம்பட்டி , கம்பம், போடி ஆகிய சட்டசபை தொகுதிகளுக்குள் உள்ள வாக்காளர்கள் லோக்சபா தேர்தலுக்கான ஓட்டு மட்டும் போட்டால் போதும்.

    சென்னையில் பரபரப்பு... ஆற்காடு வீராசாமியின் பேரன் ஓட்டிய கார் மோதி எஸ்ஐ படுகாயம் சென்னையில் பரபரப்பு... ஆற்காடு வீராசாமியின் பேரன் ஓட்டிய கார் மோதி எஸ்ஐ படுகாயம்

    இப்படி இருந்தபோதிலும், ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், லோக்சபா தொகுதிக்கு மட்டும் கணிசமானோர் வாக்களித்து விட்டு சென்று விட்டனர்.

    வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் அதிகாரிகள் கணக்கிட்டபோது, இரு வாக்குப் பதிவு இயந்திரங்களிலும் பதிவான வாக்குகளில் சுமார் 10 சதவீதம் வித்தியாசம் இருப்பது தெரியவந்துள்ளது. வாக்குச்சாவடிக்கு வந்த வாக்காளர்களுக்கு, அதிகாரிகள் வழிகாட்டி, அவர்களை சட்டசபை தேர்தலுக்கும், வாக்களிக்க கூறவில்லை. இதனால் வாக்கு எண்ணிக்கையின் போது குளறுபடி ஏற்படும் சூழல் எழலாம் என்கிறார்கள்.

    வாக்காளர்கள் அறியாமையிலும், பதற்றத்திலும் இருப்பது இயல்பானது. ஆனால், தேர்தல் பூத் அலுவலர்கள் சரியாக கண்காணித்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    In Theni, 10% voters caste their vote for just Loksabha constituency only, not for 2 assembly elections.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X