சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேனி, தஞ்சையில் கொரோனா கோரத்தாண்டவம்.. மாவட்ட வாரியான கொரோனா நிலவரம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் ஆகஸ்ட் 7ம் தேதி நிலவரப்படி எந்த மாவட்டத்தில் எத்தனை பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை இப்போது பார்ப்போம். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5880 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சுமார் 4900 பேர் சென்னை தவிர பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

சென்னையில் இன்று அதிகபட்சமாக 984 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூரில் 388 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 22 மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் 200க்கும் மேற்பட்டோரும், 4 மாவட்டங்களில் 300க்கும் மேற்பட்டோரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதே நேரம் இன்று தமிழகத்தில் நீலகிரி, திருப்பூர், கரூர், தர்மபுரி, பெரம்பலூர், ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 50க்கும் கீழான பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 5,880 பேருக்கு தொற்று.. இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனாவால் உயிரிழப்பு கிடுகிடு தமிழகத்தில் இன்று 5,880 பேருக்கு தொற்று.. இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனாவால் உயிரிழப்பு கிடுகிடு

தஞ்சையிலும் உயர்வு

தஞ்சையிலும் உயர்வு

தேனியில் 351 பேரும், செங்கல்பட்டில் 319 பேரும், ராணிப்பேட்டையில் 253 பேரும், திருவண்ணாமலையில் 252 பேரும், கோவையில் 228 பேரும், தஞ்சையில் 212 பேரும், கடலூரில் 212 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி சேலம்

கன்னியாகுமரி சேலம்

நெல்லையில் 200 பேரும், தூத்துக்குடியில் 195 பேரும், கன்னியாகுமரியில் 187 பேரும், புதுக்கோட்டையில் 173 பேரும், சேலத்தில் 168 பேரும், காஞ்சிபுரத்தில் 166 பேரும், வேலூரில் 158 பேரும், கள்ளக்குறிச்சியில் 139 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை திருச்சி

மதுரை திருச்சி

திண்டுக்கல் மாவட்டத்தில் 134 பேரும், தென்காசியில் 117 பேரும், மதுரையில் 109 பேரும் திருச்சியில் 105 பேரும், விருதுநகரில் 101 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாகையில் 78 பேரும் விழுப்புரத்தில் 73 பேரும், பெரம்பலூரில் 69 பேரும், ஈரோட்டில் 67 பேரும், திருப்பத்தூரில் 66 பேரும், சிவகங்கை மாவட்டத்தில் 64 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 51 பேரும் பாதிக்கப்படுள்ளனர்.

நீலகிரியில் குறைவு

நீலகிரியில் குறைவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 46 பேரும், திருவாரூர் மாவட்டத்தில் 44 பேரும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 43 பேரும், நாமக்கல் மாவட்டத்தில் 34 பேரும், திருப்பூர் மாவட்டத்தல் 31 பேரும். கரூர் மாவட்டத்தில் 26 பேரும், தர்மபுரி மாவட்டத்தில் 16 பேரும், நீலகிரி மாவட்டத்தில் 13 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எவ்வளவு பாதிப்பு

எவ்வளவு பாதிப்பு

தமிழகத்தில் ஆகஸ்ட் 7ம் தேதி நிலவரப்படி எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா என்பதையும், இதுவரை அங்கு எவ்வளவு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதையும் இப்போது பார்ப்போம். அடைப்புக்குறிக்குள் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

English summary
Theni , Thiruannamalai, Chengalpet, and Tanjavore and 22 districts badly affected by corona virus. District-wise abstract of cases on 06/08/2020
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X