சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரேநேரத்தில் நம்பியார், விஜயகாந்த்தாக மாறும் போலீசார்.. கொரோனாவுக்கு எதிராக கம்பம் காவல்துறை கலக்கல்

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு மத்திய மாநில அரசுகளால் பல்வேறு வகைகளில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தேனி மாவட்டம் கம்பம் காவல்துறையினர் ஒரு படி மேலே போய் விட்டனர் .

Recommended Video

    கொரோனாவிற்கு எதிராக கம்பம் போலீசாரின் மிமிக்ரி மூலம் நூதன விழிப்புணர்வு - வீடியோ

    சட்டம்-ஒழுங்கை காப்பது மட்டும் எங்கள் வேலை கிடையாது.. கொரோனா வைரஸ் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் எங்கள் வேலைதான், என்று அவர்களாகவே முன்வந்து அசத்தியுள்ளனர்.

    Theni district police creating coronavirus awareness

    அதிலும் துண்டுபிரசுரங்கள் கொடுப்பது அல்லது மைக்கில் அறிவிப்பை வெளியிடுவது என்று போரடிக்க கூடிய நடவடிக்கைகள் கிடையாது. மக்களை எளிதாக கவரக்கூடிய சினிமா எனும் ஆயுதத்தை காவல்துறை கையில் எடுத்துள்ளது. அதிலும் ஒரு போலீஸ்காரர் விதவிதமான நடிகர்களின் குரலில் மிமிகிரி செய்து, மக்களிடம் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்.

    நம்பியார், விஜயகாந்த், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோரின் குரலில் அருமையாக மிமிக்கிரி செய்து அந்த போலீஸ்காரர் விழிப்புணர்வை புகுத்துகிறார். இது காவல்துறையின் சமூகவலைத்தள பக்கங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது.

    அதில் நம்பியார் வாய்ஸில் அந்த போலீஸ்காரர் இப்படி சொல்கிறார்..: கொரோனான்னு ஏன்டா பயப்படுற.. நீ வீட்டை விட்டு வெளியே போகும்போது மாஸ்க்கை போட்டுக்க.. வெளியே இருந்து வீட்டுக்குள்ள வரும்போது நல்லா கைய சோப்பு போட்டு கழுவிக்க.. சொன்னது புரிஞ்சுதா.. என்று சொல்லிவிட்டு நம்பியாரின் டிரேட் மார்க் சிரிப்பை உதிர்க்கிறார்.

    ஒரே நாளில் கூடுதலாக 11 பேருக்கு பாதிப்பு.. இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 125ஆக உயர்வு ஒரே நாளில் கூடுதலாக 11 பேருக்கு பாதிப்பு.. இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 125ஆக உயர்வு

    இதற்கு அடுத்தபடியாக விஜயகாந்த் வாய்ஸ், அதற்குப்பிறகு பிரகாஷ்ராஜ் என அனைவர் குரலிலும் அசத்தலாக பேசுகிறார். காவல்துறை உங்கள் நண்பன் என்பது வெறும் வார்த்தையில் உள்ள வாசகம் கிடையாது. உண்மையிலேயே ஒரு பிரச்சினை என்றால் நாங்கள் முன்னால் வந்து, உங்களுக்காக நிற்போம் என்று மக்களுக்கு உணர்த்தும் வகையில் உள்ளது கம்பம் காவல்துறையினர் நடவடிக்கை. ஹேட்ஸ் ஆப்!

    கம்பம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான கூலித் தொழிலாளிகள் ஏலக்காய் தோட்ட வேலைக்காக தினமும் கேரளா வாகனங்களில் சென்று வருகின்றனர். கொரோனா அச்சத்தால், கேரளாவுக்கு வேலைக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரிலும் போலீசார் சார்பில் விளம்பர பலகைகள் வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    கம்பம் வடக்கு காவல் நிலையம் போலீசார் சார்பில் கேரளாவிற்கு வேலைக்கு செல்லும் வாகனங்களை நிறுத்தி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் கம்பம் சுற்றுவட்டார பகுதிகளில் 100 நாள் வேலை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளதால் கேரளாவுக்கு வேலைக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    English summary
    Theni district police creating coronavirus awareness among the general public by using cinema actor voices.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X