சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தேனி மருத்துவக் கல்லூரியின் சென்ணை மாணவர் உதித் சூர்யா ஆள்மாறாட்டம் செய்தது உறுதி.. கல்லூரி டீன்

Google Oneindia Tamil News

சென்னை: தேனி மருத்துவக் கல்லூரியின் சென்னை மாணவர் உதித் சூர்யா ஆள்மாறாட்டம் செய்தது உறுதி என கல்லூரி டீன் தெரிவித்தார்.

சென்னையைச் சேர்ந்தவர் உதித் சூர்யா. இவர் தேனி மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இந்த நிலையில் இவர் ஆள்மாறாட்டம் செய்து நீட் செய்து தேர்வு எழுதியதாக கல்லூரி முதல்வருக்கு ஈமெயிலில் புகார் கூறப்பட்டது.

Theni medical college dean says that Chennai studen impersonates proved

இந்த நிலையில் அந்த மாணவரின் தந்தை, தாயிடம் விசாரணை நடத்தப்பட்டதில் அவர்கள் இருவரும் முன்னுக்குப் பின் முரணாக தெரிவித்தனர். இதையடுத்து கல்லூரியில் படிக்கும் மாணவர், தேர்வு எழுதிய மாணவர் ஆகியோரின் புகைப்படங்களை ஒப்பிட்டு பார்த்ததில் வித்தியாசம் இருந்தது.

இதையடுத்து உதித் சூர்யாவின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. இந்த நிலையில் தலைமறைவாக உள்ள இரு மாணவர்களையும் தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் மாணவர் உதித் சூர்யா ஆள்மாறாட்டம் செய்தது உறுதி என மருத்துவக் கல்லூரி டீன் அறிக்கை வெளியிட்டுள்ளார். டீன் ராஜேந்திரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அறிக்கையை மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபுவிடம் ஒப்படைத்தனர்.

நீட் தேர்வு எழுதி மருத்துவ சேர்க்கை பெற்றது ஒரு மாணவர் என்றும் கல்லூரியில் சேர்ந்தது மற்றொரு மாணவர்கள் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால் தலைமறைவான இரு மாணவர்களும் விரைவில் கைது செய்யப்படுவர்.

English summary
Theni Medical College Dean Rajendran submits report to Directorate that the accusations that Chennai Student has impersonated is confirmed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X