சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிமுக எம்பி ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து ஐகோர்டில் வழக்கு.. தேனி வாக்காளர் பரபரப்பு புகார்

Google Oneindia Tamil News

Recommended Video

    OP Raveendranath : Theni : ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து வழக்கு..தேனி வாக்காளர் புகார்- வீடியோ

    சென்னை: தேனி லோக்சபா தொகுதியில் எம்பியா ரவீந்திநாத் குமார் வெற்றிக்கு எதிராக தேனியைச் சேர்ந்த வாக்காளர் மிளானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை விட சுமார் 76 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

    theni voter filed petition in high court against o p raveendranath win in theni lok sabha

    இந்த வெற்றியை எதிர்த்து தேனி தொகுதி வாக்காளர் மிளானி என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

    அவர் தனது மனுவில், அண்மையில் நடந்து முடிந்த தேனி லோக்சபா தொகுதியில் அதிமுக சார்பில் ரவீந்திரநாத் குமார் போட்டியிட்டார். இவர் தொகுதியில் வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் விநியோகம் செய்தார்.

    காஞ்சிக்கு வந்த துர்கா ஸ்டாலின்.. பயபக்தியுடன் அத்தி வரதர் தரிசனம்.. மலர்ச்சரம் பெற்றார் காஞ்சிக்கு வந்த துர்கா ஸ்டாலின்.. பயபக்தியுடன் அத்தி வரதர் தரிசனம்.. மலர்ச்சரம் பெற்றார்

    இதுதொடர்பான வீடியோ ஆதாரங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. வாக்காளர் பணப்பட்டுவாடா செய்வதற்காக பல கோடி ரூபாய் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
    இதேபோன்ற புகார் வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் வந்தபோது தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்தது. ஆனால், தேனி தொகுதியில் ஏன் அதிக அளவில் புகார் வந்தபோதும் தேர்தலை ஆணையம் நிறுத்தவில்லை.

    மேலும் தேனி லோக்சபா தேர்தலில் அதிகார துஷ்பிரயோகம் செய்தும் வாக்காளர்களுக்கு அதிகளவில் பணம் பட்டுவாடா செய்தும் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் முறைகேடு செய்து வெற்றி பெற்றுள்ளார். எனவே இவரின் வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும். இவ்வாறு தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    theni voter filed petition against o p raveendranath win in theni lok sabha at madras high court
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X