சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா கண்காணிப்பு வளையத்தில் தமிழகம் முழுக்க 15,298 பேர்... அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக தமிழகத்தில் 15298 பேர் தீவிர கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் பரவி வருகிறது. ஸ்பெயினில் இருந்து கோவை திரும்பிய 32 வயது பெண்ணுக்கும், கலிபோர்னியாவில் இருந்து திரும்பிய 64 வயது மூதாட்டிக்கும், துபாயில் இருந்து தமிழகம் திரும்பிய 43 வயது ஆணுக்கும் நேற்று முன்தினம் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன்பின்னர் மதுரையைச் சேர்ந்த ஒருவர், சென்னையைச் சேர்ந்த 3 பேர், ஈரோட்டைச் சேர்ந்த இருவர் உள்பட 15 பேருக்கு ஏற்பட்டுள்ளது.

There are 15298 people in the whole of Tamil Nadu at the Corona Observation

இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இன்று நிலவரப்படி வெளிநாடுகளில் இருந்து வந்த 2,09,163 பேர் ஆய்வு செய்யப்பட்டார்கள். அவர்களில் 15298 பேர் தீவிர கண்காணிக்கப்பில் வைக்கப்பட்டுள்ளார்கள். அதில் 9154 பேர் தனி அறையில் வைத்து தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறையால் கண்காணிக்கப்படுகிறார்கள்

தற்போது கொரோனா அறிகுறிகளுடன் 116 பேர் மருததுவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்றைய நிலவரப்படி 743 பேரின் ரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதில் 15 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. பாதிப்பு இல்லாதவர்கள் 608 பேர் ஆவர். 120 பேரின் ரத்த மாதிரிகள் இன்னும் ஆய்வில் உள்ளது என்றார்.

முன்னதாக விஜயபாஸ்கர் சட்டசபையில் பேசுகையில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவுவதால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தினார். மதுரையைச் சேர்ந்த கொரோனா வைரஸ் நோயாளி கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

English summary
There are 15298 people in the whole of Tamil Nadu at the Corona Observation, 15 conformed Coronavirus cases
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X