சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காங். வேட்பாளர்கள்.. ஒரு திருப்பம்.. ஒரு குழப்பம்.. ஒரு காமெடி! ஒரு மாற்றமும் உண்டு!

Google Oneindia Tamil News

Recommended Video

    Congress Candidates List: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

    சென்னை: காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை நேற்று நள்ளிரவில் அக்கட்சி வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலை உற்று பார்த்தோமோயானால் அதில் 4 விஷயங்கள் புலப்படும்.

    நானா நீயா என ஒரு கை பார்த்துவிடுவோம் என்ற போட்டியில் அனைத்து கட்சிகளும் களத்தில் இறங்கி வேலை பார்த்து வருகின்றன. இவற்றில் அனேக கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டது.

    ஆனால் இதுவரை வேட்பாளர்களை அறிவிக்காமல் இருந்த காங்கிரஸ் கட்சி நேற்று நள்ளிரவில் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

    "இந்த" இரு தொகுதிகளில் காங்கிரஸ், பாஜக நேரடியாக மல்லுக்கட்டு!.. போட்டி பலமா இருக்கும் போலயே

    பலமான ஆட்கள்

    பலமான ஆட்கள்

    அதில் குழப்பம், திருப்பம், செம காமெடி, ஏமாற்றம் என 4 அம்சங்கள் தெளிவாகியுள்ளது. குழப்பம் என்று பார்த்தோமேயானால் சிவகங்கை தொகுதி வேட்பாளரை அறிவிப்பதில் அக்கட்சிக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. அறிவித்ததே தாமதம், இதில் ஒரு தொகுதியை அறிவிக்காமலேயே விட்டுள்ளது. இதை பார்க்கும் போது காங்கிரஸ் கட்சியில் அத்தொகுதிக்கு பலமான ஆட்கள் இல்லையா என கேட்கத் தோன்றுகிறது.

    திருப்பம்

    திருப்பம்

    அது போல் திடீர் திருப்பமாக ஈவிகேஎஸ் இளங்கோவன் தேனியில் போட்டியிடுகிறார். அவர் விருதுநகரில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேனியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத், அமமுகவின் தங்கதமிழ்ச் செல்வன் உள்ளிட்டோரை எதிர்க்கும் விதமாக இளங்கோவனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

    புதுவை

    புதுவை

    காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை இதோ அறிவிக்கும் அதோ அறிவிக்கும் என பார்த்து பார்த்து புதுவை காங்கிரஸுக்கு கண்கள் பூத்து போயிற்று. அதனால் நாராயணசாமி அதிரடியாக ஒரு வேலை செய்துள்ளார். வேட்பாளர் பட்டியலை தலைமை அறிவிப்பதற்கு முன்பே வைத்திலிங்கத்தை வேட்பாளராக தேர்வு செய்து நேற்று வேட்புமனுவும் தாக்கல் செய்துவிட்டு பின்னர் அந்த தகவலை கட்சி தலைமைக்கு அனுப்பிவிட்டார். இதன் பிறகு புதுவைக்கு வேட்பாளர் வைத்திலிங்கம் என காங்கிரஸ் வெளியிட்டுள்ளது சிரிப்பை வரவழைக்கிறது.

    பெருத்த ஏமாற்றம்

    பெருத்த ஏமாற்றம்

    அதுபோல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராக உள்ள குஷ்புவுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அவரும் தலைமை கூறினால் போட்டியிடுவேன் என அறிவித்திருந்தார். ஆனால் நேற்றைய தினம் அறிவித்த பட்டியல்களில் குஷ்புவின் பெயர் இல்லை. இது பெருத்த ஏமாற்றமாகவே கருதப்படுகிறது.

    English summary
    There are twist, confusion, comedy and disappointment in Tamilnadu Congress party's candidate list.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X