சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வர்றவங்கெல்லாம் டாக்டராவே இருக்காங்களே.. நாடித்துடிப்பை நச்சுன்னு பார்ப்பாங்கல்ல.. குஷியில் அதிமுக

Google Oneindia Tamil News

Recommended Video

    கலக்கும் அதிமுக கூட்டணி!..எத்தனை எத்தனை மருத்துவர்கள்?- வீடியோ

    சென்னை: "அரசியல் எல்லாம் ஒரு சாக்கடை.. படித்தவர்கள் எல்லாம் அரசியலில் எங்கே ஈடுபட போகிறார்கள்.." என்ற மனநிலையில் உள்ளவரா நீங்கள்? மாற்றிக் கொள்ளுங்கள். இப்போதெல்லாம் மருத்துவர்கள் தான் கட்சியின் தலைவர்களாக உள்ளனர்.

    அதிலும் அதிமுக கூட்டணிக்கு அப்படியான டாக்டர்கள் வரிசையாக வந்து சேர்ந்துள்ளது ஆச்சரியத்திலும் ஆச்சரியம் தான். பள்ளிக் கல்வியைக்கூட முழுமையாக முடிக்காதவர்கள் தான் அரசியலில் ஈடுபடுவார்கள் என்ற ஒரு பொதுக்கருத்து இப்போது மெல்ல மெல்ல மாறிவருகிறது.

    சமூகவலைத்தளங்களில் தீவிர அரசியல் பேசுவோர் அனைவருமே மெத்தப் படித்த மேதாவிகளாகத்தான் உள்ளனர்.

    ஆபீசில் உடன்படிக்கை.. முதல்வர் பங்கேற்கவில்லை.. அதிமுக கூட்டணியில் திடீர், திடீர் வித்தியாசங்கள்ஆபீசில் உடன்படிக்கை.. முதல்வர் பங்கேற்கவில்லை.. அதிமுக கூட்டணியில் திடீர், திடீர் வித்தியாசங்கள்

    மருத்துவர்கள்

    மருத்துவர்கள்

    சமூக வலைத்தளங்களில் கருத்து கூறுவதோடு மட்டுமல்ல.. இப்போது படித்த இளைஞர்கள் நேரடியாக களத்திற்கு, வரத் தொடங்கிவிட்டனர். பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு கூட கிடையாது.. மிகவும் மதிக்கத்தக்க மருத்துவப் படிப்பு முடித்தவர்கள் கூட அரசியலில் கோலோச்சத் தொடங்கியுள்ளனர். அதிமுக, திமுக, பாஜக, பாமக என பல முன்னணி கட்சிகளில் மருத்துவர்கள், எம்பிக்களாகவும், எம்எல்ஏக்களாகவும் இருப்பதை சுட்டிக் காட்ட முடியும்.

    சமூக நோக்கம்

    சமூக நோக்கம்

    பல லட்சம் செலவு செய்து விட்டு, டாக்டர் படிப்பை முடித்தவர்கள், மருத்துவத் துறையில் கிடைக்கும் வருமானத்தை வைத்துக் கொண்டு நிம்மதியாக காலத்தை ஓட்டலாம்தான். ஆனால், சமூக நோக்கத்திற்காக, அரசியலில் இவர்கள் காலடி எடுத்து வைக்கிறார்கள். அதிலும் அதிமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பெரும்பாலானோர் மருத்துவர்களாக அமைந்துள்ளது விந்தையிலும் விந்தை.

    ராமதாஸ், அன்புமணி

    ராமதாஸ், அன்புமணி

    அதிமுக முதலில் கூட்டணி வைத்த பெரிய கட்சி பாமக. அதன் தலைவர் ராமதாஸ் ஒரு மருத்துவர் என்பது தமிழகத்தின் பட்டி தொட்டியில் உள்ள அனைவருக்கும் தெரியும். பெயரிலேயே டாக்டர்.ராமதாஸ் என்பதை குறிப்பிடுபவர். இவரது மகனும், கட்சியின் இளைஞரணி தலைவருமான, அன்புமணியும் டாக்டர் ஆகும். மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் இவர்.

    மருத்துவக் கூட்டணி

    மருத்துவக் கூட்டணி

    இதையடுத்து பாஜக கூட்டணி வைத்த பாஜகவின் தமிழ் மாநில தலைவர் தமிழிசை ஒரு மருத்துவர். இன்று புதிய தமிழகம் கட்சியுடன் அதிமுக கூட்டணி உடன்படிக்கையை மேற்கொண்டுள்ளது. புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியும் மருத்துவர்தான். ஆகமொத்தம் இது ஒரு மருத்துவ கூட்டணியாக மாறிப் போயுள்ளது.

    வெற்றிக் கூட்டணியாகுமா?

    வெற்றிக் கூட்டணியாகுமா?

    அரசியல் பணிகளுக்கு நடுவே அவ்வப்போது ஏழை எளியவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் சமூக பணிகளையும், அக்கட்சித் தலைவர்களான டாக்டர்கள் செய்து கொண்டுதான் உள்ளனர். டாக்டர்கள் அடங்கிய இந்த கூட்டணி, பொது மக்களின் நாடித்துடிப்பை சரியாக கணித்து வெற்றி கூட்டணியாக மாறுமா என்பதை, வரும் லோக்சபா முடிவுகள் நமக்கு தெரிவிக்கும் என்பதுதான் உண்மை.

    English summary
    There are many doctorate leaders making alliance with a AIADMK for the upcoming Lok Sabha election 2019. Major partners like BJP, PMK has doctors as the party chiefs.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X