சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஓகே சொன்ன முதல்வர்! சனிப்பெயர்சிக்கு பிறகு வெளியாகும் அறிவிப்பு? ஐ.பெரியசாமிக்கு வருவாய் துறையா?

Google Oneindia Tamil News

சென்னை : தமிழக முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் இரண்டாவதாக மாற்றம் செய்ய இருப்பதாகவும் அதிருப்தியில் இருக்கும் மூத்த அமைச்சரான ஐ.பெரியசாமிக்கு வருவாய்த்துறை ஒதுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு திமுக தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலின் முதன் முறையாக நேரடியாக 2021 சட்டமன்ற தேர்தலில் சந்தித்தார்.

திமுக பெரு வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த நிலையில் பல்வேறு மூத்த அமைச்சர்களுக்கும் ஜூனியர் அமைச்சர்களுக்கும் அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட்டது. கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் 33 பேர் அமைச்சரவையில் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

 குடும்ப தலைவிகளுக்கு ஹாப்பி நியூஸ்! மாதம் ரூ 1000 எப்போது தொடங்கப்படும்? ஓப்பனாக சொன்ன ஐ.பெரியசாமி குடும்ப தலைவிகளுக்கு ஹாப்பி நியூஸ்! மாதம் ரூ 1000 எப்போது தொடங்கப்படும்? ஓப்பனாக சொன்ன ஐ.பெரியசாமி

அமைச்சர்கள்

அமைச்சர்கள்

அதே நேரத்தில் ஜூனியர் அமைச்சர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த துறைகள் ஒதுக்கப்பட்டதோடு கட்சியில் பல ஆண்டுகளாக உழைத்த முக்கிய மற்றும் மூத்த நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் இல்லாத துறைகள் ஒதுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதனால் பல சீனியர் அமைச்சர்களும் கடும் அதிருப்தியில் இருந்தனர். குறிப்பாக தென்மாவட்டங்களில் பலம் பொருந்திய நிர்வாகிகளில் ஒருவரான திண்டுக்கல்லை சேர்ந்த கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு அத்துறையை ஒதுக்கப்பட்டதில் உடன்பாடு இல்லை என கூறப்பட்டது.

கடும் அதிருப்தி

கடும் அதிருப்தி

அவரது பரிந்துரையின் பேரில் ஜூனியர் சக்கரபாணிக்கு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை ஒதுக்கப்பட்ட நிலையில் தனக்கு கூட்டுறவுத் துறை ஒதுக்கப்பட்டதால் அவர் கடும் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது. தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அனைவரையும் டெபாசிட் இழக்க செய்த ஐ.பெரியசாமி கூட்டுறவுத்துறை ஒதுக்கப்பட்டதால் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக கூறப்பட்டது. மேலும் சில ஜூனியர் அமைச்சர்கள் தன்னை மதிக்கவில்லை என்று வெளிப்படையாகவே பேசியது குறிப்பிடத்தக்கது.

ஐ.பெரியசாமி

ஐ.பெரியசாமி

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட முதன்முறையாக நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூட்டுறவுத்துறை செயல்பாடுகள் சரியில்லை என பொதுவெளியில் பேசியது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவர் திருப்தி அடைய தேவை இல்லை முதல்வரும் மக்களும் திருப்தி அடைந்தால் போதும் என அமைச்சர் ஐ.பெரியசாமியும் வெளிப்படையாக பதிலடி கொடுத்தார். இதை தொடர்ந்து பல சீனியர் அமைச்சர்கள் ஐ.பெரியசாமிக்கு ஆதரவாக அடுத்தடுத்து பேசத் தொடங்கினர்.

உட்கட்சி பூசல்

உட்கட்சி பூசல்

கட்சியில் புதிதாக உட்கட்சி பூசல் உருவாவதை விரும்பாத முதல்வர் ஸ்டாலின் அதிருப்தியில் இருக்கும் அமைச்சர்களை திருப்திப்படுத்தும் வகையில் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல கட்சியில் நீண்ட நாட்களாக அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என தொண்டர்களும் அமைச்சர்களும் வலியுறுத்தி வரும் உதயநிதிக்கும் அமைச்சர் பதவி வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஏப்ரல் 14ஆம் தேதி சனிப்பெயர்ச்சிக்கு முன்பு அல்லது அதற்கு பிறகாக தமிழக அமைச்சரவையில் இரண்டாவது ஆக மாற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

அமைச்சரவை மாற்றம்

அமைச்சரவை மாற்றம்

ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது. போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆகவும் அமைச்சர் சிவசங்கர் போக்குவரத்து துறை அமைச்சராகவும் மாற்றம் செய்யப்பட்டார். அதன் பிறகு தற்போது அமைச்சரவை மாற்றம் குறித்த தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. இதில் சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராகவோ அல்லது செய்தி துறை அமைச்சர் ஆகவோ பொறுப்பேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

வருவாய்த்துறை

வருவாய்த்துறை

இதேபோல் துறைகளிலும் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் நீண்ட நாட்களாக தனக்கு உரிய துறையை ஒதுக்கீடு செய்யவில்லை என அதிருப்தியில் இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு வருவாய்த்துறை ஒதுக்கீடு செய்யப்படலாம் எனவும் வருவாய்த்துறை அமைச்சராக இருக்கும் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கூட்டுறவுத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியிருக்கிறது.

விரைவில் அறிவிப்பு

விரைவில் அறிவிப்பு

இது மட்டுமல்லாமல் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர் பெரிய கருப்பன் உள்ளிட்ட சில அமைச்சர்களின் துறைகளும் மாற்றம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் தற்போது எம்எல்ஏக்களாக இருக்கும் புதியவர்களுக்கும் அமைச்சர் அவையில் வாய்ப்பு வழங்கப்படும் எனவும் இது குறித்த அறிவிப்புகள் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என திமுக அமைச்சர்களும் தொண்டர்களும் மிகுந்த ஆர்வத்தோடு காத்துக் கிடக்கின்றனர்.

English summary
After about one and a half years after DMK leader Stalin took charge as the Chief Minister of Tamil Nadu, there are reports that there is going to be a second change in the Tamil Nadu cabinet and the disgruntled senior minister I.Periyaswamy is going to be assigned the revenue department.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X