சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம் கன்ஃபார்ம் போல.. அதான் அமைச்சர் இப்படி சொல்லியிருக்காரு!

Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு வாய்ப்புள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் மெகா கூட்டணி வைத்து 17வது மக்களவை தேர்தலை எதிர்கொண்டன. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் வேலூர் தவிர்த்து 38 தொகுதிகளுக்கு லோக்சபா தேர்தல் நடைபெற்றது.

கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் கடந்த 23ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

 ஸ்டாலினுக்கு திறமை இருக்கா.. தைரியம் இருக்கா.. கள்ளக்குறிச்சி பிரபு பொளேர் கேள்வி! ஸ்டாலினுக்கு திறமை இருக்கா.. தைரியம் இருக்கா.. கள்ளக்குறிச்சி பிரபு பொளேர் கேள்வி!

தமிழகத்தில்

தமிழகத்தில்

இதில் நாடு முழுவதும் பெரும்பாலான தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் வாய்ப்பை பெற்றது. ஆனால் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெற முடியவில்லை.

வாக்கு வித்தியாசம்

வாக்கு வித்தியாசம்

பாஜகவின் முக்கிய வேட்பாளர்களும் எதிர்க்கட்சியினரிடம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றனர். அதிமுகவும் நடாளுமன்ற தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்தது. அதிமுக ஒரே ஒரு எம்பியை மட்டுமே பெற்றது.

அதிமுகவுக்கு ஒரு எம்பி

அதிமுகவுக்கு ஒரு எம்பி

தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓபி ரவீந்திரநாத் குமார் மட்டுமே அதிமுக சார்பில் வெற்றி பெற்றார். அதிமுக கூட்டணியின் ஒரே எம்பியும் ரவீந்திரநாத்தான்.

அமைச்சரவையும்..

அமைச்சரவையும்..

இதனால் தமிழகத்திற்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்குமா என்ற எதிர்ப்பார்ப்பு வலுத்தது. நாளை பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ளார். அவருடன் மத்திய அமைச்சரவையும் பதவி ஏற்கிறது.

அதிமுகவுக்கு வாய்ப்பு

அதிமுகவுக்கு வாய்ப்பு

இந்நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய, அமைச்சர் கடம்பூர், புதிதாக அமையவுள்ள மத்திய அமைச்சரவையில் அதிமுக பங்கேற்கவும் வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.

தமிழிசை பதில்

தமிழிசை பதில்

மேலும் அடுத்து வரவுள்ள நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக வெற்றிபெறும் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். பதவியேற்பு விழாவில் பங்கேற்க டெல்லி செல்லும் முன்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு தமிழிசை பதிலளித்தார்.

வைத்தியலிங்கம்?

வைத்தியலிங்கம்?

அப்போது மத்திய அமைச்சரவையில் தமிழகத்திற்கு இடம் கிடைக்குமா என கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு பதிலளித்த தமிழிசை தமிழகம் புறக்கணிக்கப்படாது என்றார். இந்நிலையில் அதிமுகவின் ராஜ்ய சபா எம்பியான வைத்தியலிங்கத்திற்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

யாருக்கு பதவி?

யாருக்கு பதவி?

ஆனால் நிச்சயமாக அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதில் அமைச்சர் பதவி ராஜ்யசபா உறுப்பினரான வைத்திலிங்கத்திற்கு வழங்கப்படுமா அல்லது ஓபிஎஸின் மகன் ரவீந்திரநாத்துக்கு வழங்கப்படுமா என்பதே கேள்வி. அதற்கும் விரைவில் பதில் தெரிந்துவிடும்.

English summary
Minister Kadambur Raju says there is a chance for ADMK in Union Cabinet. New Union cabinet taking oath tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X