சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவும் அபாயமுள்ள பகுதியாக தமிழக அரசு அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு முக்கிய அறிவிப்பாக வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 234 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதில் கொரோனா வைரஸ் நோய் தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939, பிரிவு 62 இன் கீழ் பொது சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டிய தொற்று நோயாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிவு 76இன்படி தமிழ்நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளை நோய் சட்டம், 1897இன் படி வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

கொரோனா கிடக்கட்டும்.. ஈரானை கடுமையாக எச்சரிக்கை செய்து டிவீட் போட்ட டிரம்ப்.. என்னாச்சு திடீர்னு!கொரோனா கிடக்கட்டும்.. ஈரானை கடுமையாக எச்சரிக்கை செய்து டிவீட் போட்ட டிரம்ப்.. என்னாச்சு திடீர்னு!

அடுக்குமாடி குடியிருப்புகள்

அடுக்குமாடி குடியிருப்புகள்

அரசு/தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளிகள், கல்லூரிகள், திருமண மண்டபங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்கள், தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் முதலான இடங்களில் பணிபுரிபவர்கள், மாணவ மாணவியர் மற்றும் வருகை புரிபவர்களின் எண்ணிக்கைக்கேற்ப தேவையான அளவு தண்ணீர் குழாய்கள் மற்றும் வாஷ்பேசின்கள், திரவ சோப்பு கரைசல் அல்லது கை கழுவும் சோப்பு வைக்கப்பட வேண்டும்.

அடுக்குமாடி குடியிருப்புகள்

அடுக்குமாடி குடியிருப்புகள்

அரசு/தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளிகள், கல்லூரிகள், திருமண மண்டங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்கள், தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் முதலான இடங்களில் பணிபுரிபவர்கள், மாணவ மாணவியர் மற்றும் வருகை புரிபவர்களின் எண்ணிக்கைக்கேற்ப தேவையான அளவு தண்ணீர் குழாய்கள் மற்றும் வாஷ்பேசின்கள், திரவ சோப்பு கரைசல் அல்லது கை கழுவும் சோப்பு வைக்கப்பட வேண்டும்.

கொள்ளை நோய் சட்டம்

கொள்ளை நோய் சட்டம்

அரசு, தனியார் மருத்துவமனைகள் அவ்வப்போது முழுவதுமாக கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்து நோய்த் தொற்று ஏற்படாத வகையில் பராமரிக்கப்பட வேண்டும். நோய்த் தொற்று நடவடிக்கைகள் எடுக்கத் தவறும் மருத்துவமனைகள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த பொது அறிவிப்பானது தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939, கொள்ளை நோய் சட்டம் 1897இன் கீழ் கொடுக்கப்படுகிறது.

தண்டனை

தண்டனை

மேற்குறிப்பிட்ட அறிவுரைகளை கடைப்பிடிக்க தவறுபவர்கள் மீது தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939 மற்றும் கொள்ளை நோய் சட்டம் 1897இன் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 188 இன் கீழ் ஆறு மாத சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்த தண்டனைக்குள்ளாவார்கள். இந்த பொது அறிவிப்பு சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எழுத்து மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் கருதப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Here is an announcement by government that there is a high chance to spread Coronavirus throughout Tamilnadu state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X