சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஒரே சாய்ஸ்".. வேற வழியே இல்லை.. இதைவிட்டால் தேமுதிக அவ்வளவுதான்.. பாவம் விஜயகாந்த்..!

தேமுதிக தனித்து போட்டியிட முடிவு செய்யலாம் என்கிறார்கள்

Google Oneindia Tamil News

சென்னை: தேமுதிகவுக்கு இப்போது இருப்பது இதுதான் கடைசி வாய்ப்பு.. இதை சரியாக பயன்படுத்தி கொண்டால், விஜயகாந்த் என்ற ஒற்றை சிங்கத்தின் உழைப்புக்கும், அவர் மீது இன்னமும் பாசமும், அன்பும் வைத்து காத்திருக்கும் தேமுதிக தொண்டர்களுக்கும் ஒரு நன்றிக்கடனாக இருக்கும்..!

சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது.. ஒவ்வொரு கட்சிகளுக்கும் தங்களுக்கான சீட்கள், தொகுதி ஒதுக்கீடுகளில் மும்முரம் காட்டி வருகின்றன. இவ்வளவு காலம் அமைதியை கடைப்பிடித்து வந்த தேமுதிக, இப்போது விழி பிதுங்கி கிடக்கிறது.

ஒருத்தரும் பேச்சுவார்த்தைக்கு கூப்பிடவில்லை.. அப்படி ஒரு செய்திகூட மீடியாவில் கசியவில்லை.. கடந்த எம்பி தேர்தலின்போதுகூட, கூட்டணி விஷயம் சூடு பிடித்த நேரத்தில், ஸ்டாலின் விருகம்பாக்கம் வீட்டுக்கு சென்று விஜயகாந்த்தை சந்தித்து பேசிவிட்டு வந்தார்..

 உடல்நலம்

உடல்நலம்

அமைச்சர்கள் சென்று பேசிவிட்டு வந்தனர்.. ஸ்டாலின் சென்று விஜயகாந்த்தை நேரில் சந்தித்து விட்டு வந்தார்.. சரத்குமார் சென்றார்.. இப்படி எல்லாருமே விஜயகாந்த்தை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தாலும், அது கூட்டணிக்கான அடித்தளமாக பார்க்கப்பட்டது.

தேமுதிக

தேமுதிக

ஆனால், பாமகவுக்கு இணையான சீட் வேண்டும் என்று கண்டிஷன் போடவும்தான் அதிமுக தலைமை கடுப்பானது.. சென்ற முறை எப்படி சீட் கேட்டு நெருக்கடி தந்ததோ, இந்த முறையும் அதே பிடிவாதத்தை தேமுதிக காட்டி வருகிறது.. சென்ற முறை பாஜகவின் சப்போர்ட்டால் கூட்டணிக்குள் நுழைந்தது தேமுதிக.. இந்த பாஜக, தனக்கான சீட்டையே இன்னும் உறுதிப்படுத்தாக நிலையில் தேமுதிக பற்றி பேச்சே காணோம்.

 பாமக

பாமக

இதற்கு நடுவில் திமுக தேமுதிகவுடன் கூட்டணிக்கு முயற்சிப்பதாக தகவல் வந்தது.. ஆனால், அதுவும் அப்படியே காற்றில் கரைந்து போய்விட்டது. தேமுதிகவை பொறுத்தவரை எல்லாமே விஜயகாந்த்தான்.. அந்த கட்சியை உருவாக்க அவர் பட்ட பாடும், உழைத்த உழைப்பும் கொஞ்ச நஞ்சமல்ல.. இப்படி ஒரு கட்சி இன்றைக்கும் உச்சரிக்க காரணம் விஜயகாந்த் என்ற ஒற்றை நபர்தான்..!

கூட்டணி

கூட்டணி

ஆனால், அவருக்கு உடம்பு சரியில்லாமல் போனதில் இருந்தே, அந்த கட்சி அப்படியே தரைமட்டமாக படுத்துவிட்டது.. இப்போதைக்கு வெறும் 2 சதவீதம் வாக்குகளைதான் கையில் வைத்துள்ளது... இதை வைத்து கொண்டுதான், 41 சீட் கேட்டு பிடிவாதம் பிடிக்கிறார் பிரேமலதா. கூட்டணியிலேயே இருந்தால், எப்படியும் மாநிலங்களவை எம்பி பதவியை இந்த முறையாவது வாங்கிவிடலாம், ராஜ்ய சபா சீட் கிடைத்தால் நிச்சயம் சுதீஷை இந்த முறை மத்திய அமைச்சராகவும் வாய்ப்பு கிடைக்கும் என்று பிரேமலதா யோசிப்பதே இது எல்லாவற்றிற்கும் காரணம்.

 தோல்வி

தோல்வி

ஆனால், கடந்த முறை தேமுதிகவுக்கு வடசென்னை, கள்ளக்குறிச்சி, திருச்சி, விருதுநகர் என 4 தொகுதிகள் தந்தும், நான்கிலும் மண்ணை கவ்விக் கொண்ட நிலையில், சீட்டுகளை அள்ளி தர அதிமுக தயாராக இல்லை.. "அவங்க வந்தால் வரட்டும், வராவிட்டால் போகட்டும்" என்று எடப்பாயாரும் நெருக்கமானவர்களிடம் ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டாராம்..

 தொண்டர்கள்

தொண்டர்கள்

இது தேமுதிகவுக்கு பெருத்த அவமானத்தை தந்துள்ளது.. கூட்டணி பேச்சை உடனே தொடங்குங்கள் என்று வாய்விட்டு பிரேமலதா சொலலியும் அதிமுக கண்டுகொள்ளவில்லை.. இதனால் தேமுதிக தொண்டர்கள் கடுமையான அதிருப்தியில் அவமானத்தில் உள்ளனர்.. "வேணாம் கேப்டன்.. நாம தனித்து நிற்கலாம்.. நீங்க இருக்கீங்க, நாங்க இருக்கோம்.,. நம்ம தனித்தன்மையை யாரிமும் அடகு வைக்க வேணாம் என்று கடந்த தேர்தலின்போதே நிர்வாகிகள் வலியுறுத்திய நிலையில், இப்போது ரொம்பவே நொந்து போயுள்ளனர்.

ஜெயலலிதா

ஜெயலலிதா

அன்று 2011-ல் தொகுதி பேச்சுவார்த்தைக்கு போயஸ் வீட்டில் விஜயகாந்த்துக்காக காத்தருந்தவர் ஜெயலலிதா.. ஆனால், இன்று ஒருத்தரும் சீந்தாத நிலைமைக்கு ஆளாகிவிட்டது.. பாமகவிடம் அமைச்சர்கள் ஓடி ஓடி அதிமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்துவதை இப்படி கண்ணெதிரே பார்த்தும் தேமுதிக ஏன் தன் முடிவை மாற்றி கொள்ளவில்லை என தெரியவில்லை. இப்படி இலவு காத்த கிளியாய் இருப்பதைவிட, சிங்கம்போல துணிந்து தனித்து தேமுதிக களம் இறங்குவதே சிறந்த முடிவாக இருக்க முடியும்.

 தனித்துபோட்டி?

தனித்துபோட்டி?

கடைசிவரை யாருமே கூப்பிடாவிட்டால் தேமுதிக என்ன செய்யும்? அப்படி ஒரு அவமானம் வரும் வரை காத்திருக்க வேண்டுமா? தேமுதிகவுடன் கூட்டணி சேர்ந்ததற்காக வெட்கப்படுகிறேன், என்று வாய்விட்டு அதிமுகவே அன்று அவையில் சொல்லியபோதே, தேமுதிக துணிந்திருக்க வேண்டும்.. இல்லாவிட்டால் தொண்டர்கள் மாற்று கட்சியை தேடி கொண்டு போய்விடுவார்கள்..

 விஜயகாந்த்

விஜயகாந்த்

இருப்பதே கொஞ்சம் நஞ்சம் தொண்டர்கள்தான்.. அவர்களும் விஜயகாந்த் என்ற நல்ல இதயத்துக்காகவே ஒட்டிக் கொண்டுள்ளனர்.. அவர்களுக்காகவாவது தேமுதிக துணிந்து முடிவெடுக்க வேண்டும்.. உயிரை கொடுத்து கட்சியை வளர்த்த கேப்டனின் மானத்தை கொஞ்சமாவது காப்பாற்ற முன் வர வேண்டும்..!

English summary
There is a last Chance to DMDK in TN Assembly Election 2021
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X