சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

'அவர்' வேண்டாம்.. நம்ப முடியாது.. ஓபிஎஸ் போடும் முட்டுக்கட்டை.. தர்மசங்கடத்தில் எடப்பாடியார்

திமுகவுக்கு பிரஷாந்த் கிஷோர் நெருக்கம் என்பதால், அதிமுகவுக்குள் யோசனை செய்கிறதாம்

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிமுக-வில் ஒபிஎஸ்சை ஓரம்கட்ட எடப்பாடி அணி முயற்சியா?- வீடியோ

    சென்னை: இவரை நம்பலாமா.. நம்பப் படாதா.. அட்வைஸ் கேட்கலாமா, வேணாமா என்று அரசியல் சாணயக்கியன் என்று சொல்லப்படும் பிரஷாந்த் கிஷோரை பார்த்து எக்கச்சக்கமாக அதிமுக தரப்பு குழம்பி போயுள்ளதாம்!

    தேர்தல் வியூகங்களை அமைத்து கொடுக்கும் அரசியல் புலி.. சிறந்த ஆலோசகர்.. திறமைசாலி.. தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுப்பதில் வல்லவர். ஐபேக் நிறுவன ஆலோசகராக இருக்கிறார்.

    இவரிடம் காணப்படும் முக்கிய அம்சம் என்னவென்றால், கட்சி யாருக்காக வேலை பார்க்கிறோமோ அவர்களுக்கு விசுவாசமாக இருப்பார். ஒரே சமயத்தில் பல்வேறு கட்சிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் இவர் பாகுபாடின்றி வியூகம் அமைத்து தரும் கெட்டிக்காரர்.

    முதல்வர் சந்திப்பு

    முதல்வர் சந்திப்பு

    இப்படித்தான் ஒவ்வொரு முறையும் மோடியின் வெற்றி அமைந்தது.. ஜெகன்மோகன் ரெட்டி ஆகட்டும், நிதிஷ் குமார் ஆகட்டும்.. இவர்களின் வெற்றிக்கு பின்னால் மூளையாக இருந்து செயல்பட்டது இவர்தான்! இப்படிப்பட்டவரைதான் நம் முதல்வர் போய் சந்தித்து உள்ளார்.

    ஒப்பந்தம்?

    ஒப்பந்தம்?

    ஏற்கனவே தேர்தல் தோல்வியில் நொந்து போயுள்ளதால், இவரை சந்தித்து முதல்வர் நிறைய பேசியதாகவும் கூறப்பட்டது. அதுமட்டுமில்லை, 2021-ல் தமிழக சட்டமன்ற மக்களவை தேர்தலில் அதிமுகவை வெற்றி பெற வைக்க பிரசாந்த் கிஷோரை நியமிக்கவும் வாய்ப்புள்ளதாகவும், இதற்கு ஒப்பந்தம் போடப்படுவதாகவும் கூட செய்திகள் வந்தன.

    சபரீசன்

    சபரீசன்

    ஆனால் இப்போது விஷயம் என்னவென்றால், பிரஷாந்த் கிஷோருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனுடன் நெருக்கம் உள்ளதாம். இந்த விஷயம்தான் அதிமுகவுக்கு இடிக்கிறது. ஓஎம்ஜி என்கிற நிறுவனம்தான் திமுகவுக்கு பிரசார, விளம்பர வியூகங்களை வகுத்து கொடுக்கிறது. ஸ்டாலினின் நமக்கு நாமே திட்டம்கூட, இந்த நிறுவனம் தந்த ஐடியாக்கள்தான். இப்படிப்பட்டவர்களை கூட வைத்து கொண்டால், என்னாகுமோ என்பதுதான் அதிமுகவின் கவலையாக எழுந்துள்ளது.

    ஓபிஎஸ்

    ஓபிஎஸ்

    அதனால் பிரஷாந்த் கிஷோரிடம் ஆலோசனை பெற துணை முதல்வர் ஓபிஎஸ் கடுமையான ஆட்சேபனை தெரிவிக்கிறாராம். திமுகவுடன் நெருக்கமான தொடர்புகள் உள்ளதால் அவரை அணுகக் கூடாது என்று பிடிவாதமாக எதிர்க்கிறாராம் ஓபிஎஸ். அதேபோல, எடப்பாடி நெருக்கமான தலைவர்கள் சிலரும் கூட எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது. இதனால் பிரஷாந்த் கிஷோருடன் ஒப்பந்தம் போடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளாக தகவல்கள் வருகின்றன.

    ஆக மொத்தம் .. பிரசாந்த் கிஷோர் என்ற பிரம்மாஸ்திரத்தை முழுமையாக கையில் எடுத்து பயன்படுத்தி கொள்வது யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

    English summary
    Dy CM O Panneeerselvam is said to be opposed to Prashant Kishor's political advice to AIADMK
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X