சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எவனா இருந்தா எனக்கென்ன.. அதிரடி ஜெயலட்சுமி.. போதை கும்பலை துரத்தி பிடித்து அசத்தல்!

பெண் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    Inspector Jayalakshmi : போதை கும்பலை துரத்தி பிடித்து ஜெயலட்சுமி அசத்தல்!- வீடியோ

    சென்னை: "நீ யாரா இருந்தா எனக்கென்ன" என்று போதையில் போலீசாரை தாக்கிய கும்பலை கைது செய்து அசால்ட் காட்டிய ஜெயலட்சுமிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

    காவல்துறை ஆய்வாளர்தான் ஜெயலட்சுமி.. 1986-ம் ஆண்டு,எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது முதல் நிலை காவலராக பணியமர்த்தப்பட்டவர்.

    இவரது கடுமையான உழைப்பு + சட்டத்தை மதிக்கும் இவரது பாங்குதான், 2004ல் துணை ஆய்வாளர், 2013ல் ஆய்வாளர், திருவள்ளூர் மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பொறுப்புக்கள் வந்து சேர்ந்தன.

    கடமை

    கடமை

    7 பாலியல் வன்கொடுமை வழக்குகள் உட்பட எத்தனையோ குற்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை சட்டத்தின்முன் நிறுத்தியவர். இவர் இதுவரை யாருக்குமே அஞ்சியது கிடையாது. தன்னுடைய போலீஸ் பணியை மனசாட்சியோடு ஆற்றிவருகிறார்.

    வாகன சோதனை

    வாகன சோதனை

    இவர் சமீபத்தில்கூட ஒரு அதிரடியை நிகழ்த்தி உள்ளார். சென்னையில் ஒருநாள் இரவு கும்பல் ஒன்று தண்ணி அடித்துவிட்டு ரோட்டில் ரகளை செய்துள்ளது. வாகன சோதனையின்போது பணியில் இருந்த போலீசார் இந்த கும்பலை வழிமறித்து விசாரித்துள்ளனர்.

    விரட்டி பிடித்தார்

    விரட்டி பிடித்தார்

    அதற்கு அந்த கும்பலோ, போலீஸை சரமாரியாக தாக்கிவிட்டு நகர்ந்தது. இந்த விஷயம், ஆயிரம் விளக்கு பகுதியில் ரோந்து பணியில் இருந்த ஜெயலட்சுமிக்கு தெரியவந்தது. அடுத்த செகண்டே, அந்த கும்பலை துரத்தி சென்று விரட்டி பிடித்தார் ஜெயலட்சுமி.

    வக்கீல்கள்

    வக்கீல்கள்

    திடீரென ஒரு பெண் போலீஸ் அதிகாரி தங்கள் முன் நிற்பதை பார்த்து மிரண்டு போன அந்த கும்பல், "நாங்கள் எல்லாம் வக்கீல்கள்" என்றார். அதற்கு ஜெயலட்சுமி, "நீங்கள் யாராக இருந்தாலும் எனக்கென்ன.. சட்டம் தன் கடமையை செய்யும்" என்று சொல்லி அங்கேயே சிறைபிடித்து விட்டார். இவருக்குதான் தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன!

    English summary
    Congratulations to Chennai Police Inspector Jayalakshmi for chasing and arresting the drunken youths
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X