சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கச்சா எண்ணெய் விலை குறைந்தது... பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.38 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி இன்றும் அதே விலையில் தொடர்கின்றன

பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்தது. அதன்படி, கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. நேற்றைய நிலவரப்படி கச்சா எண்ணெய் விலை 3.06 சதவீதம் குறைந்தது. இருப்பினும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை.

There is no change in petrol and diesel prices

கடந்த ஜனவரி - அக்டோபர் மாத இடைவெளியில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. அக்டோபர் மாதம் 17-ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.86.10, டீசல் விலை ரூ.80.04 என்ற உச்சத்தை தொட்டது. இதனையடுத்து, பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்தது. இதனால், பெட்ரோல், டீசல் விலை குறைந்து வந்தது. இன்றைய நிலவரப்படி, சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.38 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி இன்றும் அதே விலையில் தொடர்கின்றன

English summary
Petrol price hike Rs. 72.41 coins and diesel Price Rs. 67.38 for coins according to price notification issued by state fuel retailers,
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X