சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒத்தை தலைமை என்ற பேச்சே காணோமே.. சொத்தையா முடிஞ்சு போச்சே... இதுதான் காரணமா?

அதிமுக கூட்டத்தில் ஒற்றை தலைமை என்ற விவாதம் எழவில்லை என்று கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    AIADMK Meeting: ஒற்றை தலைமை என்ற விவாதமே இல்லை.. அதிமுக கூட்டம் நிறைவு- வீடியோ

    சென்னை: அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட ஒத்தை தலைமை என்ற விவாதமே இல்லாமல், இன்றைய அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்து முடிந்துள்ளது.

    முதல்வர், துணை முதல்வர் என்று இரு பெரும் தலைமை இருக்கும்போது, ராஜன் செல்லப்பா ஒற்றை தலைமை என்று பற்ற வைத்த விவாதம் இன்று கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது.

    ஒரு நிர்வாகி கட்சி தலைமையையும் தாண்டி கருத்து சொன்னதற்கு, அவரை அதிமுக தலைமை எந்த வகையிலும் கண்டிக்கவில்லை. அதே சமயம் மற்ற நிர்வாகிகளை வாயே திறக்கக்கூடாது என்று கண்டிஷன் போட்டுவிட்டது.

    அதிமுக செய்தி தொடர்பாளர்கள் ஊடகங்களில் பேசக்கூடாது.. மீறினால்.. ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்ட கட்சி தலைமை!அதிமுக செய்தி தொடர்பாளர்கள் ஊடகங்களில் பேசக்கூடாது.. மீறினால்.. ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்ட கட்சி தலைமை!

    ஏன் பேசவில்லை?

    ஏன் பேசவில்லை?

    இதையும் மீறி திருப்பரங்குன்றத்தில் ஆலோசனை கூட்டம் நடந்ததற்கும் எந்தவித மறுப்பும், கருத்தும் அதிமுக தலைமை சொல்லவில்லை. இந்த இடத்தில் அதிமுகவின் மவுனத்திற்கு அர்த்தம் புரியவில்லை. இதனிடையே, யார் அந்த ஒற்றை தலை என்பதில் விவாதம் எழுந்தது. ஓபிஎஸ் ஒரு தரப்பு, எடப்பாடி ஒரு தரப்பு என்று போட்டி இருப்பதாக தகவல்கள் கசிந்தன.

    கண்டிப்பு

    கண்டிப்பு

    ஆனால் ஒற்றை தலைமை பற்றி யாருமே பேசவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு என்ன காரணமாக இருக்க முடியும்? இரு தலைமைகள் இருக்கும்போது, ஒரு தலைமையை மட்டும் எதிர்த்து கருத்து சொன்னால், மற்றவர்களும் கண்டிப்பாக பேச ஆரம்பிப்பார்கள்.

    தர்மசங்கடம்

    தர்மசங்கடம்

    ஏற்கனவே உள்ள பூசல் இன்னும் வெடித்து பெரிய தர்மசங்கடத்தில் கொண்டு போய் விடும், கட்சியின் இமேஜ்-ம் மேலும் உடையும் வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக வேண்டுமானால் ஒற்றை தலைமை விவாதம் எழுப்பப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

    நிர்வாகிகள்

    நிர்வாகிகள்

    அது மட்டுமில்லை.. ராஜன் செல்லப்பா போல, வேறு யாராவது தலைமைக்கு எதிரான கருத்துக்களை சொல்ல நேரிடும் என்பதாலேயே நிர்வாகிகளுக்கு வாய்ப்பூட்டும் போடப்பட்டுள்ளது. அதனால்தான், கட்சி நிர்வாகிகளின் கருத்துக்களை தனித்தனியே கேட்டறிய அதிமுக தலைமை ஏற்பாடு செய்யும் என்றும் கூட்டத்தில் உறுதியளிக்கப்பட்டதாக தெரிகிறது.

    கருத்து சொல்லவில்லை

    கருத்து சொல்லவில்லை

    இதன்மூலம் யாருக்கெல்லாம் அதிருப்தி உள்ளதோ அவர்கள் தலைமையிடம் வெளிப்படையாக பேச வாய்ப்பு கிடைக்கும், அதன்மூலம் பிரச்சனைகள் ஓரளவு களையப்படும் என்று நம்பப்படுகிறது. நடந்து முடிந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், கேபி முனுசாமி, வைத்திலிங்கம் மட்டுமே பேசி உள்ளனர். மற்றவர்கள் எந்த கருத்தையும் சொல்லவில்லையாம்.

    அவசியம்தானா?

    அவசியம்தானா?

    அதனால் ஒற்றை தலைமை என்பது, பொதுக்குழுவை கூட்டி விவாதிப்பது அல்லது நிர்வாகிகளின் கருத்தை கேட்டறிவது அல்லது ஒற்றை தலைமை அவசியம்தானா என்பதை ஓபிஎஸ், இபிஎஸ் கூடி முடிவு செய்வது என்பன போன்ற நடவடிக்கைகளுக்கு பிறகுதான் முடிவாகும் சூழல் உள்ளது. இதன் காரணங்களுக்காகவே இன்றைய கூட்டத்தில் ஒற்றை தலைமை விவாதம் எழுப்பவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன.

    English summary
    No Discussion about Single Leadership in AIADMKs District Secretaries Meeting
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X