சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாமக-வுக்கு இனி அரசியல் எதிர்காலம் இல்லை... சொல்வது வேல்முருகன்

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok Sabha Election Results: திமுக வெற்றியை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வரவேற்கிறது- வேல்முருகன்- வீடியோ

    சென்னை: பாமக-வுக்கு இனி அரசியல் எதிர்காலம் இல்லை என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் பண்ருட்டி வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

    திமுக தலைவர் ஸ்டாலினை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, திமுக கூட்டணி வெற்றிக்கு அவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

    There is no political future for PMK says Velmurugan

    பின்னர், செய்தியாளர்களிட பேசிய அவர், தமிழகம் சமூக நீதிக்கான மண் என்பதை நிரூபித்திருக்கிறது என்றார். இந்த மாபெரும் வெற்றியை தமிழக வாழ்வுரிமைக் கட்சி மனதார வரவேற்கிறது என்றும் கூறினார்.

    தமிழ் மக்களுக்கும் சொந்த சமூகத்திற்கும் மருத்துவர் ராமதாசும் பாட்டாளி மக்கள் கட்சியும் செய்த துரோகத்தை மக்களிடம் எடுத்துரைத்தோம் என்று கூறிய பண்ருட்டி வேல்முருகன், தமிழக மக்களை ஏமாற்றி வஞ்சித்து வெற்றிகளை பாமக அனுபவித்து வந்ததாக விமர்சனம் செய்தார்.

    அதிரடி மாற்றத்திற்கு தயார்.. ரஜினியை சந்திக்க காத்திருக்கும் அதிமுக தலைகள்.. விரைவில் ஆலோசனை! அதிரடி மாற்றத்திற்கு தயார்.. ரஜினியை சந்திக்க காத்திருக்கும் அதிமுக தலைகள்.. விரைவில் ஆலோசனை!

    வன்னியர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி செய்த துரோகத்தின் பலனாக, இன்று அவர்கள் போட்டியிட்ட 7 தொகுதியிலும் தோல்வியை தழுவியுள்ளனர். பாமகவின் அரசியல்பாணி இனி தமிழகத்தில் பலிக்காது என்றும் அவர் தெரிவித்தார். திராவிட கட்சிகளுடன் ஒரு போதும் கூட்டணி கிடையாது என்று கூறியிருந்த பாமக, திடீரென அதிமுக கூட்டணியில் இடம் பெற்றது. இதனை, சமூக வலைதளங்களில் பலர் விமர்சனம் செய்தனர்.

    இதன்பிறகு, அக்கட்சியில் இருந்து சில நிர்வாகிகள் விலகி மற்ற கட்சிகளில் சேர்ந்தனர். தேர்தலிலும், அன்புமணி ராமதாஸ் உட்பட அனைவரும் தோல்வி அடைந்தனர். இறுதியில், ஒரு ராஜ்ய சபா சீட் மட்டுமே மிச்சம்.

    English summary
    Velmurugan Said that There is no political future for PMK
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X