சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழக அரசியலில் வெற்றிடமா.. ரஜினிகாந்த்துக்கு எடப்பாடி கொடுத்த பதில் என்ன தெரியுமா?

Google Oneindia Tamil News

Recommended Video

    ரஜினிகாந்த்துக்கு எடப்பாடி கொடுத்த பதில் என்ன தெரியுமா?

    சென்னை: தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இல்லை என்று, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி இன்று அளித்த பேட்டி: அதிமுகவின், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியே உள்ளாட்சித் தேர்தலிலும். உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் உரிய நேரத்தில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இல்லை, என்பது சமீபத்தில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் அதிமுக பெற்ற, வெற்றி மூலமாக நிரூபணமாகிவிட்டது. ரஜினிகாந்த் இப்போதும் ஒரு நடிகர்தான். அவர் இன்னும் கூட, கட்சி ஆரம்பிக்கவில்லை. இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

    அந்தம்மா ஜெயிலில் இருந்து வர்றதுக்குள்ளே அமமுகவே இருக்காது.. தினகரன் மீது தங்க தமிழ்செல்வன் அட்டாக்அந்தம்மா ஜெயிலில் இருந்து வர்றதுக்குள்ளே அமமுகவே இருக்காது.. தினகரன் மீது தங்க தமிழ்செல்வன் அட்டாக்

    வெற்றிடம்

    வெற்றிடம்

    சில தினங்களுக்கு முன்பு பேட்டியளித்த நடிகர் ரஜினிகாந்திடம், தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருப்பதாக முன்பு கூறிய உங்கள், நிலைப்பாட்டில் மாற்றம் இருக்கிறதா என்று நிருபர்கள், கேட்டதற்கு, இன்னமும்கூட ஆளுமை மிக்க அரசியல் தலைவர்களுக்கு தமிழகத்தில் வெற்றிடம் நிலவி வருகிறது என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.

    இரு தலைமைகள்

    இரு தலைமைகள்

    லோக்சபா தேர்தலில், பெரும்பாலான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. சமீபத்தில் நடைபெற்ற விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. இதன் மூலமாக திமுகவில், அதன் தலைவர் ஸ்டாலின், அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவருமே இரு கட்சிகளிலும் ஆளுமையாக உருவெடுத்துவிட்டனர் என்று, அரசியல் விமர்சகர்கள் கூறிவந்த நிலையில், ரஜினிகாந்த் கருத்து இரு கட்சிகளிலுமே சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

    துரைமுருகன் கிண்டல்

    துரைமுருகன் கிண்டல்

    ரஜினிகாந்தின் கருத்துக்கு பதில் தெரிவித்த திமுக பொருளாளர் துரைமுருகன், தொடர்ச்சியாக படப்பிடிப்பில் இருந்து வருவதால், தமிழக அரசியலில் தட்பவெப்ப சூழ்நிலை ரஜினிக்கு தெரியவில்லை, எனவே வெற்றிடம் இருப்பதாக கூறி வருகிறார். திமுக தலைவர் ஸ்டாலினால், அந்த வெற்றிடம் எப்போதோ நிரப்பப்பட்டு விட்டது என்று தெரிவித்திருந்தார்.

    எடப்பாடி பதில்

    எடப்பாடி பதில்

    இந்த நிலையில்தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இல்லை என்று திட்டவட்டமாக ரஜினிகாந்துக்கு பதிலளிக்கும் விதமாக கருத்து கூறியுள்ளனர்.

    English summary
    There is no political vacuum in Tamilnadu says chief minister Edappadi Palanisamy, while giving reply to actor Rajinikanth's recent interview. In that the actor turned politician says, in Tamil Nadu still strong leadership vacuum is there.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X