சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"பாஜக"தான்.. சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத மோசமான கட்சி.. அழுத்தமாக வாக்கை பதிவு செய்த வாசகர்கள்

Google Oneindia Tamil News

சென்னை: "பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில் மோசமான கட்சி" என்று பெயரை பாஜக பெற்றுள்ளது. இதற்கான கருத்து கணிப்பில் நம் வாசகர்கள் அழுத்தமான வாக்கையும் பதிவு செய்துள்ளனர்.

நாடெங்கும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் சோஷியல் டிஸ்டன்ஸ், மாஸ்க் அணிவது உள்ளிட்டவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன... எங்கெல்லாம் இவை மீறப்படுகிறதோ அங்கெல்லாம் அபராதமும் போடப்பட்டு வருகின்றன.

ஆனால், சமூக இடைவெளியை பல மாநிலத்தில் ஆளும் கட்சியினரே பின்பற்றுவதில்லை... குறிப்பாக பாஜக கட்சி சமூக இடைவெளி பற்றி பிரசாரம் செய்து வரும் வேளையில் அக்கட்சியினரே அதை பின்பற்றுவதில்லை என்று காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

அதை விடுங்க.. அதிமுக - சசிகலா இணைவதால் யாருக்கு லாபம்.. யாருக்கெல்லாம் நஷ்டம்? அதை விடுங்க.. அதிமுக - சசிகலா இணைவதால் யாருக்கு லாபம்.. யாருக்கெல்லாம் நஷ்டம்?

 நிவாரண பொருட்கள்

நிவாரண பொருட்கள்

அதற்கேற்றார்போல் ஆங்காங்கே பல நிகழ்வுகளும் நடந்து வருகின்றன.. மத்தியப்பிரதேச மாநிலத்தில் பாஜக தலைவர்கள் கலந்து கொண்டு நிவாரணப் பொருட்கள் வழங்கிய நிகழ்ச்சிகளில் விதிகள் மீறல் நடப்பதாகக் காங்கிரஸ் கட்சியினர் ஆதாரத்துடன் குற்றம் சாட்டினர்.

 கார்த்தி சிதம்பரம்

கார்த்தி சிதம்பரம்

அதேபோல, மதுரையில் கார்த்தி சிதம்பரம் எம்பி கலந்து கொண்ட நிவாரண உதவிகள் வழங்கும் விழாவிலும் சமூக விலகல் சிறிதும் கடைபிடிக்கப்படாதது சர்ச்சையைக் கிளப்பியது... எனினும், பல்வேறு மாநிலங்களில், பல்வேறு பாஜக நிகழ்ச்சிகளின் போட்டோக்கள்தான் சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டது. இப்போதும் பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழாவை பாஜகவினர் ஆங்காங்கே கொண்டாடி வருகின்றனர்.

 பிறந்த நாள்

பிறந்த நாள்

அந்த விழாக்களிலும் பெரும்பாலானோர் மாஸ்க் போடாமல் பங்கேற்று வருகின்றனர்.. குறிப்பாக இந்த பிறந்த நாள் விழாவில், நலத்திட்ட உதவிகளும் தருவதால், அதை வாங்குவதற்காகவே மக்கள் கூட்டம் அதிகமாக குழுமுகிறது.. முண்டியத்து கொண்டு பொருட்களை வாங்கி வருகின்றனர். பொதுமக்களும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது இல்லை.. இந்த பிறந்த நாள் விழா சம்பந்தப்பட்ட வீடியோக்களும் சோஷியல் மீடியாவில் தினமும் வெளியாகி வருகின்றன.

 மோசமான கட்சி

மோசமான கட்சி

இந்நிலையில், வாசகர்களிடம் நாம் கருத்து கணிப்பு நடத்தினோம்.. அதில், "பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில் மோசமான கட்சி எது?" என்ற கேள்வியை முன்வைத்தோம். "பாஜக" என்ற ஆப்ஷனுக்கு 38.4 சதவீதம் பேரும், "திமுக" என்று 20.19 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.

 நாம் தமிழர்

நாம் தமிழர்

"அதிமுக" என்று 12.67 சதவீதம் பேரும், "நாம் தமிழர்" என்று 4.1. சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர். "எல்லா கட்சியும் மோசம்" என்று 23.97 சதவீதம் பேர் சொல்லி உள்ளனர்.. ஆனால், பாஜக மீது தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும் "காங்கிரஸ் கட்சி" என்ற ஆப்ஷனுக்கு வெறும் 0.67 சதவீதம் பேர் மட்டுமே அழுத்தமாக வாக்கு செலுத்தி உள்ளனர்.

English summary
There is no social distancing keeping in BJP Functions
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X