சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இழுபறி நீடிப்பு? தேமுதிகவுடன் அதிமுக கூட்டணி உறுதியாக இன்னும் ஓரிரு நாட்கள் ஆகும்.. ஓபிஎஸ்

Google Oneindia Tamil News

Recommended Video

    ADMK DMDK Alliance | தேமுதிகவுடன் இழுபறி நீடிப்பு? ஓபிஎஸ்

    சென்னை: அதிமுக-தேமுதிக, இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் இல்லை என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

    அதிமுக கூட்டணியில் இன்று புதிய தமிழகம் கட்சி இணைந்தது. கூட்டணி உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்ட பிறகு நிருபர்களிடம் பேட்டி அளித்தார் ஓ.பன்னீர்செல்வம்.

    There is no struggle between AIADMK and Vijayakanths dmdk: O.Panneerselvam

    அப்போது விஜயகாந்தின் தேமுதிக, அதிமுக கூட்டணி இடையேயான பேச்சுவார்த்தை எந்த அளவில் உள்ளது என்று நிருபர்கள் கேள்வியை முன்வைத்தனர்.

    அதற்கு பதிலளித்த பன்னீர்செல்வம், அதிமுக-தேமுதிக இடையேயான பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் இல்லை. ஓரிரு நாளில் நல்ல முடிவு வெளியாகும் என்று தெரிவித்தார்.

    அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 5 லோக்சபா தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா தொகுதியும் வழங்கப்படும் என்று, தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

     </a></strong><a class=அதிமுக கூட்டணியில் இணைந்தது புதிய தமிழகம் கட்சி.. ஒரு தொகுதி ஒதுக்கீடு! " title=" அதிமுக கூட்டணியில் இணைந்தது புதிய தமிழகம் கட்சி.. ஒரு தொகுதி ஒதுக்கீடு! " /> அதிமுக கூட்டணியில் இணைந்தது புதிய தமிழகம் கட்சி.. ஒரு தொகுதி ஒதுக்கீடு!

    இது தொடர்பாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் தனது கட்சி, நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    பார்த்தசாரதி, இளங்கோ, அக்பர் உள்ளிட்ட நிர்வாகிகள் விஜயகாந்துடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக வழங்க தயாராக உள்ள 5 தொகுதிகளில், எந்தெந்த தொகுதிகளை தேமுதிகவிற்கு கேட்கலாம் என்பது தொடர்பாக இதில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எங்கெல்லாம் தேமுதிக வலிமையாக உள்ளதோ அந்த லோக்சபா தொகுதிகளை கேட்டுப் பெறலாம் என்பது இந்த ஆலோசனை கூட்டத்தின், நோக்கமாக உள்ளது.

    English summary
    There is no struggle between aiadmk and Vijayakanth's dmdk, very soon Alliance announcement will comes out, says O.Panneerselvam , Meanwhile, Vijayakanth making discussion with his party senior leaders at party office.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X