சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விரும்பிய தொகுதிகளை பெற தவறிய தேமுதிக.. 3 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பே இல்லை!

Google Oneindia Tamil News

Recommended Video

    தொகுதி ஒதுக்கீட்டில் திருப்தியடையாத தேமுதிக, பாமக ?

    சென்னை: தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட 4 தொகுதிகளில் தேமுதிகவுக்கு 3 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு குறைவுதான் என கூறப்படுகிறது.

    நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை இன்று ஒதுக்கீடு செய்தது. இதில் பாமக, தேமுதிக நிர்வாகிகளோ தலைவர்களோ இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை.

    இதற்கு காரணம் அதிமுக மீது கொண்ட அதிருப்தி என கூறப்படுகிறது. பாஜக கேட்ட தொகுதிகளை அதிமுக கொடுத்துவிட்டது. ஆனால் இவர்கள் கேட்ட தொகுதிகளை கொடுக்காதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    வடசென்னை, கள்ளக்குறிச்சி.. திமுக- தேமுதிக நேரடி மோதல்.. தேமுதிக நிச்சயம் அவுட்?வடசென்னை, கள்ளக்குறிச்சி.. திமுக- தேமுதிக நேரடி மோதல்.. தேமுதிக நிச்சயம் அவுட்?

    கிடைத்தது யாருக்கு

    கிடைத்தது யாருக்கு

    ஆரணி, தென் சென்னை, கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகளை பாமக கேட்டது. அது போல் தருமபுரி, அரக்கோணம், கிருஷ்ணகிரி ஆகிய தொகுதிகளை தேமுதிக கேட்டது. ஆனால் ஆரணி, தென் சென்னையில் அதிமுக போட்டியிடுகிறது. அது போல் கள்ளக்குறிச்சி தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    யார் போட்டி

    யார் போட்டி

    மேலும் தருமபுரி, அரக்கோணம், கிருஷ்ணகிரி ஆகிய தொகுதிகளில் பாமகவுக்கு முதல் இரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்துள்ளது. அது போல் கிருஷ்ணகிரியில் அதிமுக போட்டியிடுகிறது.

    வெற்றி

    வெற்றி

    இந்த நிலையில் தேமுதிகவுக்கு கள்ளக்குறிச்சி, திருச்சி, வடசென்னை, விருதுநகர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கள்ளக்குறிச்சி தொகுதிக்கு பாமகவும், தேமுதிகவும் மல்லுக்கட்டி வந்தன. அங்கு இரு கட்சியினருக்குமே வெற்றி வாய்ப்புகள் ஏராளம் உண்டு. எனினும் கடைசியில் தொகுதியை கேட்டு பெற்றதில் தேமுதிக வெற்றி கண்டுவிட்டது.

    திமுக போட்டி

    திமுக போட்டி

    ஆனால் வடசென்னை, திருச்சி, விருதுநகர் ஆகிய தொகுதிகளில் தேமுதிகவுக்கு வெற்றி வாய்ப்பே இல்லை என்பதால் தொண்டர்கள் கவலையில் உள்ளனர். வடசென்னை திமுகவின் கோட்டை என்பார்கள். அந்த தொகுதியில் தற்போதும் திமுக போட்டியிடுகிறது.

    தேமுதிக தொண்டர்கள் வேதனை

    தேமுதிக தொண்டர்கள் வேதனை

    எனவே இங்கு தேமுதிகவுக்கு வெற்றி வாய்ப்புக்கு சான்ஸே இல்லை என கூறப்படுகிறது. அது போல் திருச்சி, விருதுநகர் ஆகியன திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் அங்கு எதிர்த்து போட்டியிடும் தேமுதிகவின் பருப்பு வேகாது என்றே கூறப்படுகிறது. எனவே கேட்ட தொகுதிகளையும் கொடுக்காமல் வெற்றிக்கு வித்திடும் தொகுதிகளையும் கொடுக்காமல் தேமுதிகவை அதிமுக பழி வாங்குகிறது என்பது தொண்டர்களின் மனக்குமுறல்.

    English summary
    DMDK will win only in Kallakurichi. Out of 3 constituencies it has no winning chances for this party.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X