சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னைக்கு ஊரடங்கில் எந்த தளர்வும் கூடாது.. அரசுக்கு மருத்துவக்குழு அளித்த 2 முக்கிய பரிந்துரைகள்

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் சென்னைக்கு ஊரடங்கில் எந்த தளர்வும் அறிவிக்கக்கூடாது என்று தமிழக அரசுக்கு மருத்துவ நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் அறிவிக்கப்பட்ட நாடு தழுவி லாக்டவுன் 4முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் மே 31ம் தேதியுடன் இந்த லாக்டவுனும் முடிய உள்ளது. லாக்டவுன் முடிய உள்ள போதிலும் தமிழகத்தில் சென்னை உள்பட 11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தை கடந்து விட்டது.

There should be no relaxation in the lockdown for Chennai : medical team on TN govt

கொரோனா பாதிப்பு அதிகரிப்புக்கு ஊரடங்கு தளர்வு காரணமாக இருக்கலாம் என்பது ஒரு கருத்தாக உள்ளது. இந்நிலையில் கொரோனா சிகிச்சையை மேம்படுத்தவும், கொரோனா பரவலை தடுக்க அரசுக்கு ஆலோசனைகளை வழங்கவும் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் குழு தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவுடன் நாளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.. அப்போது 5ம் கட்டமாக லாக்டவுனை தமிழகத்தில் நீட்டிப்பது குறித்து ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் உள்பட முக்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றார்கள்.

கொரோனா லாக்டவுன்... கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில் தலைவிரித்தாடும் வேலைவாய்ப்பின்மை கொடுமை! கொரோனா லாக்டவுன்... கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில் தலைவிரித்தாடும் வேலைவாய்ப்பின்மை கொடுமை!

இந்த குழுவிடம் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கொரோனா பாதிப்பு அதிகரிப்பதற்கான காரணம், கொரோனாவை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

Recommended Video

    Tamil Nadu Lockdown Extension After May 31?

    இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வரும் வரை சென்னைக்கு ஊரடங்களில் எந்த தளர்வும் அறிவிக்கக்கூடாது என்று தமிழக அரசுக்கு மருத்துவ நிபுணர்கள் குழு கூட்டத்தில் பரிந்துரைத்துள்ளது. பிற மாவட்டங்களை விட சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும் மருத்துவ நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.

    English summary
    CMi Palanisamy had consulted with the medical team on covid 19 prevention. medical team 2 recommendations to the tamilnadu Government .
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X