ரஜினி கட்சி ஆரம்பிக்கும் வரை கடன் சொல்லி சிகரெட் குடிக்க முடியாது.. இந்த அறிவிப்பு பலகையை பாருங்க!

சென்னை: சென்னையில் ஒரு பெட்டிக் கடையில் ரஜினி கட்சி ஆரம்பிக்கும் வரை கடன் கிடையாது என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
ரஜினி அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்து ஒரு ஆண்டு நிறைவடைய போகும் நிலையில் புதிய சேனல் தொடங்க போவதாக செய்திகள் வெளிவருகின்றன.
இந்நிலையில் அவரை கலாய்த்து நிறைய மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இருப்பினும் இதனை பொருட்படுத்தாது தனது பணிகளில் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.

அறிவிக்கவில்லை
ஒரு பக்கம் அரசியல் பணி இன்னொரு பக்கம் சினிமா படங்கள் என பிஸியாக உள்ளார். அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்தும் தனது கட்சி பெயரையோ அது தொடர்பான எந்த செய்தியையோ இன்னும் அவர் அறிவிக்கவில்லை.

ரஜினி பிற ஊடகங்கள்
இது அவரது தொண்டர்களை பெரும் விரக்தியில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் டிவி சேனல் தொடங்குவதற்கான பணிகள் மட்டும் நடந்து வருகின்றன. இது முழுக்க முழுக்க ரஜினி பிற ஊடகங்களை சந்திப்பதை தவிர்க்கவே என கூறப்படுகிறது.

ஆரம்பிக்கும் வரை கடன் கிடையாது
இந்நிலையில் சென்னையில் ஒரு பெட்டிக்கடையில் 'ரஜினி கட்சி ஆரம்பிக்கும் வரை கடன் கிடையாது' என்று அறிவிப்பு பலகை வைத்து வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் கடை உரிமையாளர்.

வியாபாரம் கிடையாது
வாடிக்கையாளர்களோ நல்ல வேலை அவர் கட்சி ஆரம்பிக்கும் வரை வியாபாரம் கிடையாது என கூறியிருந்தால் எத்தனை ஆண்டுகளுக்கு அவரது பிழைப்பில் மண் விழுந்திருக்குமோ என முணுமுணுத்து கொண்டனர். இன்னும் சிலரோ இதெல்லாம் ரஜினியின் காதுகளை எட்டியவுடன் உடனே கட்சியை தொடங்கிவிடுவாரா என்ன. அவருக்கென சில யோசனைகள், ஏற்பாடுகள் இருக்கும் நம்ம அவசரத்துக்கெல்லாம் அவர் கட்சி தொடங்கிவிடமுடியுமா என்ன என்கின்றனர்.