சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தேவர் ஜெயந்தி.. 8000 போலீஸ் பாதுகாப்பு.. பசும்பொன்னில் தலைவர்கள் அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கீடு

Google Oneindia Tamil News

சென்னை: ராமநாதபுரம் மாவட்டத்தின் பசும்பொன் நகரில் இன்று முத்துராமலிங்கத் தேவரின் 113வது ஜெயந்தி மற்றும் 58வது குரு பூஜை விழா நடக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், சமூக அமைப்புகளின் தலைவர்கள் அங்கு சென்று மரியாதை செலுத்த உள்ளனர்.

எடப்பாடியார், ஓ.பன்னீர் செல்வம், ஸ்டாலின் தவிர, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பாஜக மாநில தலைவர் எல்.முருகன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தேமுதிக நிர்வாகி எல்.கே.சுதீஷ், முக்குலத்தோர் புலிப்படை நிறுவனர் தலைவர் கருணாஸ் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமுதாய அமைப்பின் தலைவர்கள் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகின்றனர்.

Thevar Jayanthi: 8,000 Police deployed in Ramanathapuram district

அஞ்சலி செலுத்துவோருக்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • காலை 9 மணிக்கு அரசு சார்பில் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுகிறது.
  • காலை 9.45 முதல் 10 மணிவரை பாஜக.
  • காலை 10.00-10.15 வரை, பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் அறக்கட்டளை
  • காலை 10.15-10.30 வரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.
  • 10.30-10.45 வரை , திமுக.
  • 10.45-11.00 வரை , மதிமுக.
  • 11.00-11.15 வரை , முக்குலத்தோர் புலிப்படை.
  • 11.15-11.30 வரை அமமுக.
  • 11.30-11.45 வரை காங்கிரஸ்
  • 11.45-12.00 வரை , அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம்.
  • பிற்பகல் 12.00-12.15 வரை , நாம் தமிழர் கட்சி.
  • 12.15-12.30 வரை , தமாகா.
  • 12.30-12.45 வரை , தேமுதிக.
  • பிற்பகல் 1.00-1.15 வரை , பசும்பொன் மக்கள் கழகம்.
  • 1.15- 1.30 வரை , மூவேந்தர் முன்னேற்றக்கழகம்.
  • 1.30- 1.45 வரை, , அகில இந்திய பார்வர்ட் பிளாக்(தமிழ் மாநிலக்குழு).
  • 2.15- 2.30 வரை , அகில இந்திய பார்வர்ட் பிளாக்(சுபாஷிஸ்ட்).
  • 2.45- 3.00 வரை தென்னாட்டு மக்கள் கட்சி.
  • 4.15- 4.30 வரை , அகில இந்திய பார்வர்ட் பிளாக்(வல்லரசு).
  • 4.30- 4.45 மணி வரை, , அகில இந்திய வல்லரசு பார்வர்ட் பிளாக் என்று நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக பசும்பொன் செல்வதற்கான நடைமுறைகளில் ஒரு சில கட்டுப்பாடுகள் அரசால் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரான ஜெயக்குமார், பசும்பொன்னில் நடக்கிற பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா நிகழ்ச்சிக்கு மக்கள் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து செல்வதற்கு அனுமதி கிடையாது என அறிவித்திருக்கிறார்.

கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாக்குச் செல்பவர்கள் 5 பேருக்கு மிகாமல் அவர்கள் சார்ந்த அமைப்பின் தலைவர்கள், பிரதிநிதிகளிடம் அனுமதிக் கடிதம் பெற்று விண்ணப்பங்களை ராமநாதபுரம் மாவட்டக் கலெக்டரால் பரிசீலிக்கப்பட்டு அவரது நேரப் பட்டியலின்படியே உரிய நேரத்தில் அஞ்சலி செய்ய வேண்டும்.

மேலும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்திவிழா பாதுகாப்பை முன்னிட்டு மாவட்டத்தின் எல்லைகளில் 15 வகையான சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுத் தணிக்கைகளின் மூலம் கண்காணிக்கப்படுகின்றனர். கூடுதல் எஸ்.பி.யின் தலைமையில் 10 டி.எஸ்.பி.க்கள், 40 இன்ஸ்பெக்டர்கள், 125 எஸ்.ஐ.க்கள், 1500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் மாவட்டத்தில் தலைவர்கள் சிலைக்கு மாலை மரியாதை செலுத்தும் வகையில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் ஊர்வலம் செல்லவும், முளைப்பாரி, பால்குடம் எடுத்தல், பட்டாசு வெடித்தல் போன்றவைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தேவர் குருபூஜை காரணமாக பசும்பொன் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 8,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

English summary
8,000 police personal will be deployed in Ramanathapuram district for 113th Thevar Jayanthi and 58th Guru Puja.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X