சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Big Boss Tamil 4 :ஓட்டு போடும் முன் யோசிங்க பிக் பாஸ் மேடையில் அரசியல் பேசிய கமல்

தலைவரை தேர்ந்தெடுக்க ஓட்டுபோடுவதற்கு முன்பாக யோசித்து போடுங்க என்று பிக்பாஸ் நிகழ்ச்சி மேடையில் அரசியல் பொடி வைத்து பேசியுள்ளார் கமல்ஹாசன்.

Google Oneindia Tamil News

சென்னை: தேர்ந்தெடுக்கப்படாமலேயே தலைவரானவர் என்று முதலில் சொன்ன கமல், நேற்று தலைவரை தேர்ந்தெடுக்கும் முன்பாக யோசித்து ஒட்டு போடுங்க கூறியுள்ளார். நான் டபுள் மீனிங்கில்தான பேசுகிறேன். நீங்களும் யோசித்து ஓட்டு போடுங்க என்று அகம் டிவி வழியாக அகத்திற்குள் இருப்பவர்களுக்கு மட்டுமல்லாது பிக்பாஸ் நிகழ்ச்சியை ரசிக்கும் மக்களைப் பார்த்தும் கூறியுள்ளார் கமல்ஹாசன்.

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 4 ரியாலிட்டி நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த ஒரு வார காலமாக கிச்சன் பாலிடிக்ஸ் சண்டைகள் சச்சரவுகள் ஒளிபரப்பாகி வந்தன.

சனி, ஞாயிறுகளில் கமல் பிக்பாஸ் மேடையில் தோன்றி வீட்டிற்குள் இருப்பவர்களுடன் பேசினார். சனிக்கிழமையன்று லேசான அரசியல் பொடி வைத்து பேசிய கமல், ஞாயிறன்று வெளிப்படையாகவே அரசியலை பேசினார்.

பிக்பாஸ் மேடையில் அரசியல்

பிக்பாஸ் மேடையில் அரசியல்

நடிகராக இருந்த கமல்ஹாசன் மக்கள் நீதிமய்யம் கட்சியை தொடங்கினாலும் சினிமாவிலும் டிவி நிகழ்ச்சியிலும் பிஸியாகவே இருக்கிறார். பிக்பாஸ் மேடையில் வெளிப்படையாகவே அரசியல் பேசி வருகிறார் கமல்ஹாசன்.

ஓட்டு போடும் முன்பு யோசிங்க

ஓட்டு போடும் முன்பு யோசிங்க

தலைவராக தேர்வு செய்வதற்கு ஓட்டு போடுவதற்கு முன்பாக நல்லா யேசிங்க என்று சொல்லி கண் சிமிட்டினார். நான் டபுள்மீனிங்கில்தான் பேசுவதாக சொல்வார்கள். டபுள்மீனிங்கில்தான் பேசுவேன். இது பொதுவான இடம் இங்கே பேசுவது நிறைய பேருக்கு போய் சேரும் என்றும் சொன்னார்.

மக்களுக்கும் அட்வைஸ்

மக்களுக்கும் அட்வைஸ்

பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு மட்டுமல்லாது பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பவர்களைப் பார்த்தும் பேசிய கமல், ஓட்டுப்போடுவதற்கு முன்பே யோசித்துக்கொள்ளுங்கள் ஓட்டுப்போட்ட பிறகு வருதப்படாதீங்க என கமல் பொடி வைத்து பேசினார்.

அதிக ஹார்ட் பிரேக் வாங்கிய சுரேஷ்

அதிக ஹார்ட் பிரேக் வாங்கிய சுரேஷ்

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களிடம் அதிக ஹார்ட் பிரேக் வாங்கிய ஷிவானி, சுரேஷ் சக்கரவர்த்தி,ரேகா ஆகிய மூவரும் இந்த வாரம் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். ஏழு ஹார்ட் பிரேக் வாங்கிய சுரேஷ் சக்கரவர்த்தி ஏழு ஓட்டுக்கள் வாங்கி இந்த வார தலைவராகியுள்ளார்.

வலி தெரியும் மக்களே

வலி தெரியும் மக்களே

பிக்பாஸ் மேடையில் கமல் உணவு வீண் செய்பவர்களை சாடினார். அமிர்தம் வாங்க தேவர்கள் எல்லாம் சேர்ந்து பாற்கடலை கடைந்தனர். சில நாடுகளில் உணவு வேஸ்ட் செய்தால் வரி போடுகிறார்கள். உணவு கிடைக்காதவர்களுக்குத்தான் வலி தெரியும் என்றும் சொன்னார்.

தலைவர் அதிகாரம் இல்லை

தலைவர் அதிகாரம் இல்லை

தலைவராக தேர்வு செய்யட்டுள்ள சுரேஷ் பற்றி பேசிய கமல்,தலைவர் பதவி என்பது கடமை பொறுப்பு அதை அதிகாரமாக நினைக்க வேண்டாம். சிலர் அதிகாரமாக நினைப்பார்கள். என்று கமல் சொல்ல அதற்கு நிஷா சிரிக்க உங்க நமட்டு சிரிப்புக்கு என்னை தப்பா நினைக்கப் போறாங்க. என்று சொல்லி பிரேக் விட்டார் கமல்.

ஏழு ராசியானது

ஏழு ராசியானது

ஏழு ஹார்ட் பிரேக் வாங்கிய சுரேஷ் சக்கரவர்த்திக்கு ஏழு ஓட்டு போட்டு தலைவராக தேர்வு செய்திருக்கிறார்கள். ஏழு ஓட்டு ஏழு ராசியான நம்பர் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்றும் கூறியுள்ளார் கமல்.

பிக்பாஸ் பேச்சுடன் அரசியல்

பிக்பாஸ் பேச்சுடன் அரசியல்

பிக் பாஸ் தொடங்கப்பட்ட ஒரு வாரத்திலேயே கமலிடம் இருந்து அரசியல் பேச்சுக்கள் அதிகமாக வர ஆரம்பித்து விட்டது. இன்னும் 100 நாட்களில் பைசா செலவில்லாமல் மக்கள் நீதி மய்யத்தை மக்கள் மனதில் மையம் கொள்ளச் செய்துவிடுவார் கமல்.

English summary
Kamal, said that he should think and stick before electing the leader. I speak of double meaning. Kamal Haasan has said that you too should think and drive not only for those who are inside but also for the people who are watching the Big Boss show through Agam TV.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X