சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருக்கோவில் தொலைக்காட்சி: இனி வீட்டிலிருந்தே சுவாமி தரிசனம் செய்ய அறநிலையத்துறை ஏற்பாடு

பொதுமக்கள் வீட்டில் இருந்தே ஸ்வாமி தரிசனம் கண்டு களிக்கும் வகையில் திருக்கோயில் தொலைக்காட்சி தொடங்க அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் பெரிய ஆலயங்கள் மூடப்பட்டுள்ளன. கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடியவில்லையே என்ற ஏக்கம் பலருக்கும் இருக்கிறது. பக்தர்களின் குறையைப் போக்க தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருக்கோவில் தொலைக்காட்சியை தொடங்க உள்ளது. இனி கோவில்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகளை லைவ் ஆக வீட்டில் இருந்தே பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

மாணவர்கள் படிக்க கல்வித்தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது போல இனி கோவில்களில் நடைபெறும் திருவிழாக்களையும், அபிஷேக ஆராதனைகளையும் ஒளிபரப்ப திருக்கோவில் தொலைக்காட்சியை தமிழக அரசு தொடங்க உள்ளது.

Thirukkoil Television Channel to launch in Hindu Religious and Charitable Endowments Department

தற்பொழுது இதற்கு இதற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகின்றன என்று அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுகுறித்து அறநிலையத் துறை கமிஷனர் பணீந்திர ரெட்டி கோயில் அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 8 75 கோடி செலவில் திருக்கோயில் தொலைக்காட்சி ஒளிபரப்புக்காண முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன திருக்கோயில் தொலைக்காட்சியில் நாள் முழுவதும் ஒளிபரப்பு செய்ய அதிக அளவு படக்காட்சிகள் தேவைப்படுவதால் ஒவ்வொரு கோயில்களிலும் நடைபெறும் பிரசித்தி பெற்ற அனைத்து நிகழ்ச்சிகளும் வீடியோ கிராபர்கள் மூலம் ஒளிப்பதிவு செய்து அதற்கான குறிப்புகளுடன் ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

கொரோனா நிவாரணம் - தமிழகத்தில் நவம்பர் மாதம் வரை ரேசனில் இலவச அரிசிகொரோனா நிவாரணம் - தமிழகத்தில் நவம்பர் மாதம் வரை ரேசனில் இலவச அரிசி

வீடியோ ஆவணப்படங்கள் மற்றும் கோவில் நிகழ்வுகளை ஒளிப்பதிவு செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்:

கோயில் வளாகம் முகப்பு விமானங்கள் கோபுரங்கள் கோவிலுக்கான பெயர் தெரியும் வகையில் தொடக்க பதிவுகள் இடம் பெற வேண்டும். கோவில் அமைந்த இடம் விவரம் தெளிவாக இடம் பெற்றிருக்க வேண்டும் கோயில் தலவரலாறு பின்னணி வர்ணனை தேவையான காட்சிகளுடன் இடம்பெற்றிருக்க வேண்டும்.

கோயிலில் நடைபெறும் திருவிழாக்கள் பின்னணியில் சம்பந்தப்பட்ட கோயில் தொடர்பான பாடல்கள் இசையுடன் இடம் பெற்றிருக்க வேண்டும் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் நெகிழ்ச்சியான அனுபவங்கள் மிகவும் சுருக்கமாக அதாவது 30 விநாடிகள் பதிவு செய்ய வேண்டும்

கோயில் பக்தர்களுக்கான வசதிகள் குறித்த விபரங்கள் இடம் பெற வேண்டும் கோயிலில் நடைபெறும் சிறப்பு பூஜைகள் நடைபெறும் நேரம் தங்க ரதம் போன்றவற்றிற்கான கட்டண விபரங்கள் நடைபெறும் நேரங்கள் விபரங்கள் குறிப்பிடவேண்டும். ஒளிப்பதிவு காட்சிகளை கோயில் பணியாளர்கள் இடம் பெறுவது முற்றிலும் தவிர்த்தல் நலம் ஒளிப்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்ட சுவாமி உருவங்களை காண்பிக்கும் பொழுது அவற்றின் முழுமையான உருவங்களை ஒளிப்பதிவு செய்ய வேண்டும் சுவாமி உருவங்களை தூரத்திலிருந்து நெருக்கமான காட்சிகளாக மிகவும் அழகாக காண்பிக்கவேண்டும்

தல சிறப்பு சொல்லும் பொழுது ஓதுவார்கள் பாடும் போதும் அவர்களது உருவத்தை கீழ் ஓரத்தில் அஞ்சல் வில்லை அளவில் காண்பித்தால் போதும் அந்த நேரத்தில் சிற்பங்கள் அல்லது கோயிலின் சிறப்பான பகுதிகளை காட்சிப்படுத்த ஆயத்தமாக இருக்கவேண்டும். ஒரு கோயிலின் வீடியோ ஆவணப்படம் தயார் செய்யும்பொழுது அந்த கோயிலின் அனைத்து நிகழ்வுகளும் தொடர் நிகழ்ச்சிகளாக ஒரே சிடியில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்

முதுநிலை கோயில்களின் வீடியோ ஆவணப்படங்கள் தயார் செய்யும் பொழுது அவற்றின் உப கோயில்கள் குறித்த நிகழ்வுகளையும் சிறப்புகளையும் இடம்பெற செய்திடலாம்.மூலிகை ஓவியங்கள் புராதான கல்வெட்டுக்கள் இருந்தால் அதற்கான படங்களும் செய்திகளும் ஒளிப்பதிவு செய்யப் பட வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

English summary
A television channel will be launched in the name of Thirukkoil at an estimated cost of Rs 8.77 crore under the Hindu Religious and Charitable Endowments Department.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X