சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வள்ளுவமானது வடிவமைக்கப்பட்டிருப்பது சனாதான இந்து தர்ம கோட்பாட்டின் அடிப்படையில்: எச். ராஜா

Google Oneindia Tamil News

சென்னை: வள்ளுவமானது வடிவமைக்கப்பட்டிருப்பது சனாதான இந்து தர்ம கோட்பாட்டின் அடிப்படையில் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.

திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசப்பட்டிருப்பது பெரும் விவாதத்துக்குள்ளாகியிருக்கிறது. இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Thirukkural written with Hindu Sanadana Dharma Principles, says H Raja

கவிஞர் வைரமுத்துவும் வள்ளுவருக்கு காவி சாயம் பூசப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சிந்துசமவெளி ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் போன்றோர் வள்ளுவத்துக்கு மத சாயம் பூசக்கூடாது என

வலியுறுத்தியுள்ளனர்.வள்ளுவர் படத்தை நீக்குறோம்.. ஆனால் இந்த குறளை தப்பில்லாமல் சொல்வீர்களா.. ஸ்டாலினுக்கு பாஜக சவால்வலியுறுத்தியுள்ளனர்.வள்ளுவர் படத்தை நீக்குறோம்.. ஆனால் இந்த குறளை தப்பில்லாமல் சொல்வீர்களா.. ஸ்டாலினுக்கு பாஜக சவால்

சமூக வலைதளத்தில் #BJPInsultsThiruvalluvar என்ற ஹேஷ்டேக்கும் இந்திய அளவில் டிரெண்டிங்காகி உள்ளது. இந்த பின்னணியில் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

சனாதன இந்து தர்மத்தில் சதுர்விதபுருஷார்த்தம் அதாவது நான்கு விதமான மானுட குறிக்கோள் தர்மார்த்த காம மோக்ஷம் என்கிறது. அதன் அடிப்படையிலேயே அறம்,பொருள்,இன்பம் என்று வள்ளுவர் திருக்குறளை வடிவமைத்தார். ஆகவே வள்ளுவமானது வடிவமைக்கப்பட்டிருப்பது சனாதன இந்து தர்ம கோட்பாட்டின் அடிப்படையில்.

இவ்வாறு எச். ராஜா கூறியுள்ளார்.

English summary
BJP National Secretary H Raja tweet that Thiruvalluvar was written Thiruvalluvar with the base of Hindu Sanadana Dharma Principles.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X