• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

திடீர் முனகல்.. "அவங்க" அந்த பக்கம் போகலையாமே.. திருமா கூட செல்லலையாமே.. தெற்கத்தி ஏக்கம்!

Google Oneindia Tamil News

சென்னை: தென்மாவட்டங்களில் இருந்து திடீரென ஒரு புலம்பல் சத்தம் கேட்க தொடங்கி உள்ளது.. இதற்கு என்ன காரணம்? யார் காரணம்?

தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது.. பிரச்சாரங்கள் அனைத்தும் இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.. நடுநடுவே கருத்துக்கணிப்புகள் வெளியாகி கொண்டிருகின்றன.

இதுவரை வெளிவந்த கணிப்புகளின்படி, முக ஸ்டாலின் அபார வெற்றி என்று சொல்லப்பட்டு வருகிறது.. எடப்பாடி பழனிசாமியும், ஓபிஎஸ்ஸும் அவரவர் தொகுதியில் மாஸ் பெறுவார்கள் என்கிறார்கள்..

 திமுக

திமுக

அதுபோலவே தென்மாவட்டங்களில் டாக்டர் ராமதாஸ் தன்னுடைய செல்வாக்கை அப்படியே தக்க வைத்து வருகிறார் என்று கணிப்புகள் சொல்கின்றன. தென்மண்டலங்களில் திமுக வெற்றி பெற நிறைய வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்பட்டாலும், தினகரன் பெருமளவு அதிமுகவின் வாக்குகளை பிரிப்பார் என்றும், இதனால் அமமுகவின் வாக்கு வங்கி உயரும் என்றும் கணிக்கப்பட்டு வருகிறது.

சந்தேகம்

சந்தேகம்

இதே விஷயத்தை வேறு மாதிரியாக நாம் அணுக வேண்டி உள்ளது.. இந்த கணிப்புகளின்படி பார்த்தால், முக்கிய தலைவர்கள் பலர் தொகுதி மாறி வேறு பகுதிகளுக்கு செல்லவில்லையோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.. குறிப்பாக, பாமக இந்த முறை, 23 சீட்களுடன் களம் காணுகிறது.. வன்னியர் இடஒதுக்கீட்டை முன்வைத்துதான் இந்த முறை அரசியல் ஆட்டத்தை தொடங்கினார் டாக்டர் ராமதாஸ்.. அந்த வகையில் அவருக்கு வெற்றியும் கிடைத்து, 23 சீட்டும் கிடைத்துள்ளது.

 ராமதாஸ்

ராமதாஸ்

ஆனால், பாமக தரப்போ, வன்னியர்கள் ஓட்டை கணக்கு செய்து, இதுவரை வட மாவட்டங்களிலேயே முடங்கிக் கொண்டது... தென்மண்டலம் பக்கம் பிரச்சாரத்துக்கு அவ்வளவாக போகவில்லை என்றே தெரிகிறது.. கடந்த முறை, எம்பி தேர்தலின் போதும், ராமதாஸும் சரி, அன்புமணியும் சரி தென் மாவட்டங்களுக்கு வரவில்லை என்ற பேச்சு உள்ளது. இந்நிலையில், இப்போதும் செல்லாமல் உள்ளது, சலசலப்பை உண்டு பண்ணி வருகிறது. எல்லா பக்கமும் சென்று வந்தால்தானே, "முத்திரை" விலகி ஆதரவுகள் பெருகும் என்கிறார்கள்.

 திருமா

திருமா

அதேபோல, திருமாவும் அந்த பகுதிகளுக்கு செல்லவில்லை போலும்.. விசிக இந்த முறை 6 சீட்களை வாங்கி உள்ளது.. ஆறோ, எட்டோ, அதை பத்தி கவலை இல்லை, பாஜக வந்துவிடக்கூடாது, அதற்காகவே 6 சீட்களை வாங்கி கொண்டோம் என்று காரணம் சொல்லும் திருமாவளவன் தென் மண்டலம் பக்கமே செல்லவில்லை என்கிறர்கள்.. சீட்டுக்களையும் வட மாவட்டங்களில் வாங்கிக் கொண்டு, அங்கேயே சுற்றிசுற்றி வருகிறாராம்.

 பிரேமலதா

பிரேமலதா

இதேதான் தேமுதிகவின் நிலைமையும்... இந்த முறை விருதாச்சலத்தில் லேடி கேப்டன் கைப்பற்றுவார் என்று முழக்கத்துடன் களமிறங்கி உள்ளதால், பிரேமலதா வேறு தொகுதிகளுக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளார்.. இதை ஆரம்பத்திலேயே ஓபனாக சொல்லியும் விட்டார்.. இவரும் வடமாவட்டங்களிலேயே கவனம் செலுத்தி வருகிறார்.

 என்னாவது?

என்னாவது?

இப்படி ஆளுக்கு ஒரு பக்கம் தொகுதிகளை குறிவைத்து அங்கேயே முடங்கிக் கொண்டதால், அவர்களது தென் மாவட்ட நிர்வாகிகள் தவித்து கிடக்கிறார்களாம்.. கட்சி நிதி எதுவும் தரவும் இல்லையாம்.. அதனால், கூட்டணி கட்சியினரை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலைமைக்கு ஆளாகி உள்ளதாக புலம்பல்கள் எழுகின்றன. எல்லாருமே இப்படி வடமாவட்டங்களில் கவனம் செலுத்தினால், தென்மாவட்டம் கதி என்னாவது என்ற ஏக்க கேள்வியும் ஒலிக்க தொடங்கி உள்ளது.

English summary
Thirumavalavan and Dr Ramadoss, did not campaign for the Southern Districts
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X