சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சட்டப்பேரவை தேர்தல் 2021... விடுதலை சிறுத்தைகள் தேர்தல் பணி குழுக்கள் நியமனம்.. திருமா அறிவிப்பு..!

Google Oneindia Tamil News

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிக்குழுவை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு, தேர்தல் நிதி குழு, தேர்தல் பிரச்சார குழு என மூன்று குழுக்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் உருவாக்கப்பட்டுள்ளன.

 Thirumavalavan announced Viduthalai siruthaigal Electoral Working Committees

இது தொடர்பாக திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

எதிர்வரும் சட்டப்பேரவை பொதுத் தேர்தலையொட்டி விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குரிய அடிப்படையான தேர்தல் பணிகளை மேற்கொள்ள பின்வரும் பணிக் குழுக்கள் நியமிக்கப்படுகின்றன. கட்சியின் எதிர்கால செயல் திட்டங்களை அடிப்படையாகக் கொண்ட தேர்தல் அறிக்கையை வரையறுப்பதற்கான 'தேர்தல் அறிக்கை வரைவுக்குழு' ;

கட்சியின் அடிப்படைக் கொள்கைகள் மற்றும் மக்கள்நலம் சார்ந்த கட்சியின் பணிகள் போன்றவற்றை சமூக ஊடகம் உள்ளிட்ட அனைத்துத் தளங்களின் வழியாக வெகுமக்களிடையே பரப்பும் வகையிலான ஏற்பாடுகளை செய்வதற்குரிய 'தேர்தல் பிரச்சாரப் பணிகள் குழு; மற்றும் தேர்தலை எதிர் கொள்வதற்கு போதிய பொருளாதாரத்தைத் திரட்டுவதற்கான 'தேர்தல் நிதிக்குழு' ஆகியவை பின்வருமாறு நியமிக்கப்படுகின்றன.

தேர்தல்அறிக்கை வரைவுக் குழு:

துரை.ரவிக்குமார் (தலைவர்)
நீலவானத்து நிலவன்
கௌதம சன்னா
அ.பாலசிங்கம்
எழில்.கரோலின்
வெ.கனியமுதன்
எஸ்.எஸ்.பாலாஜி
ஆளூர் ஷாநவாஸ்
முனைவர் மகாதேவன்
பேரா.தமிழ்குமரன்
ஆசிரியர் ஆறுமுகம்

தேர்தல் பிரச்சாரப் பணிக் குழு:

சிந்தனைசெல்வன் (தலைவர்)
வன்னிஅரசு
பொதினிவளவன்
மு.கலைவேந்தன்
சிபி சந்தர்
இளமாறன்
சஜன் பராஜ்
ஆதிமொழி
யாழன்ஆதி

தேர்தல் நிதிக்குழு

மு. முகமது யூசுப்
ஏசி பாவரசு
தகடூர் தமிழ்ச்செல்வன்
இளம்சேகுவேரா
சங்கத்தமிழன்
இளந்திரையன்

மேற்கண்ட தேர்தல் பணிகுழுக்கள் தங்களின் பணிகளை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திட கட்சியின் அனைத்துப் பொறுப்பாளர்களும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு திருமாவளவன் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

English summary
Thirumavalavan announced Viduthalai siruthaigal Electoral Working Committees
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X