சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"இந்துக்களை சாதியாக பிரித்தவர் கிருஷ்ண பகவான்".. கிறிஸ்துமஸ் விழாவில் திருமா. சர்ச்சை பேச்சு

கிறிஸ்துமஸ் விழாவில் திருமாவளவன் உரையாற்றினார்

Google Oneindia Tamil News

சென்னை: இந்துக்களை கிருஷ்ண பகவான் சாதியாக பிரித்தார் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.. "நான் ஒரு இந்து என்பதாலேயே இந்து மதத்தை தொடர்ந்து இப்படி விமர்சிக்கிறேன்".. என்றும் கிறிஸ்துமஸ் விழா ஒன்றில் திருமாவளவன் பேசி உள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவன் சென்னையில் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்று பேசினார்.. அதன் சுருக்கம் இதுதான்.

Thirumavalavan Christmas Day Speech

"உலகில் இந்தியாவில் மட்டுமே இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள்.. வெளிநாடுகளில் வசிக்கின்ற இந்துக்கள் இங்கிருந்து அங்கு இடம் பெயர்ந்தவர்கள்.. இந்தியாவில் உள்ள பிற மதத்தவர்கள் வெளிநாட்டுக்காரர்கள் கிடையாது.

இயேசு, புத்தர், அல்லா ஆகியோரைவிட பகவான் கிருஷ்ணன் 5 ஆயிரம் வருஷத்துக்கு முன்பு மனிதராக பிறந்து வாழ்ந்தவர் என்று இந்து மத நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.. ஆனால், கிறிஸ்துவம், இஸ்லாம், புத்தம் ஆகிய மதங்கள் மனிதர் அனைவரையும் சமமாக பாவிப்பதாகவும், கிருஷ்ண பகவானின் போதனைகள் என்று கூறப்படும் பகவத் கீதையில்தான், மனிதர்களிடையே ஏற்ற தாழ்வுகளை உண்டாக்கும் வகையில் 4 வித வர்ணங்கள் உள்ளன.

நான் ஒரு இந்து என்பதாலேயே இந்து மதத்தை தொடர்ந்து இப்படி விமர்சிக்கிறேன்.. பெண்களை ஒடுக்குகளை போக்கு இருக்கிறது.. தீண்டாமை இருக்கிறது.. இதற்கெல்லாம் எது காரணமாக இருக்கும் என்று சமுதாய வல்லுநர்கள் ஆய்வு செய்திருக்கிறார்கள்.. அந்த வகையில் 2 பேர் தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் பெரியாரும், அம்பேத்கரும்தான்.

எந்த மதத்துக்கு எதிராகவும் நாம் பேசவில்லை..எந்த மதத்தை காயப்படுத்தும் நோக்கமும் நமக்கு இல்லை.. ஆனால் மதங்களின் கோட்பாடுகளை ஒப்பீடு செய்யும்போது, ஏன் கிறிஸ்தவத்தை விமர்சிக்கவில்லை என்று சிலர் கேட்கிறார்கள்.. இஸ்லாத்தை ஏன் விமர்சிக்கவில்லை என்று கேட்கிறார்கள்.. கிறிஸ்தவம் சமத்துவத்தை கூறுகிறது.. இஸ்லாம் சமத்துவத்தை கூறுகிறது.. அதனால் அந்த மதங்களை விமர்சிக்க வேண்டிய தேவையில்லை.

இன்னொரு காரணம் நான் அந்த மதங்களை சார்ந்தவன் இல்லை.. இந்து அடையாளத்தோடு இருக்கிறேன், அந்த கொடுமைகளை அன்றாட வாழ்வில் சந்திக்கிறேன்.. எந்த ஒரு கோட்பாடாக இருந்தாலும், அந்த கோட்பாடு மனித குலத்தை மதிக்கக்கூடியதாகவும், மேம்படுத்தக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பதைதான் எதிர்பார்க்கிறோம்.. இந்த கிறிஸ்தவ திருவிழாவானது.. சமத்துவ திருவிழா என்பதாலும், சகோதரத்துவத்தை உறுதிப்படுத்தும் திருவிழா என்பதால்தான் இதை ஏற்கிறோம்" என்றார்.

English summary
VCK Leader Thol. Thirumavalavans Controversy Speech in Christmas Event
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X